வீட்டுவசதி சங்க முன்னாள் அதிகாரி நெல்லை அருகே வெட்டி கொலை
திருநெல்வேலி: நெல்லை அருகே கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் செயலாளராக பணிபுரிந்தவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது அங்கு பதட்டத்தை உருவாக்கியுள்ளது.
நெல்லை மாவட்டம், கடையம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை முத்துமாலையாபுரத்தை சேர்ந்தவர் ஜெயமணி. இவர் தற்போது விகேபுரத்தை அருகே வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை சங்கரன்கோவிலில் இருந்து கோடரான்குளம் செல்லும் சாலையின் ஓரத்தில் வெட்டு காயத்துடன் ஜெயமணி பிணமாக கிடந்ததை, அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தெரிவித்தனர்.
அம்பை டிஎஸ்பி சங்கர், இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அவரது சட்டை பையில் கலெக்டர், ஆர்டிஓ, தாசில்தார், விஏஓ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பதிவு தபால் அனுப்பிய ரசீதுகள் இருந்தன. அதில் ஐந்தாம் கட்டளை முத்துமலையாபுரம் என்று இருந்தது.
ஜெயமணி, தூத்துக்குடி மேலூர் வீட்டு வசதி வாரிய சங்கத்தில் செயலளராக பணிபுரிந்து 3 ஆண்டுகளுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பதும், பலரிடம் வேலை வாங்கி தருவதாக அவர் பணம் வாஙகியதும் விசாரணையில் தெரிய வந்தது.
வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அவரை கொலை செய்தார்களா, அல்லது நிலப்பிரச்சனையால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்பதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது அங்கு பதட்டத்தை உருவாக்கியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications