Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வீடு தேடி வரும் ஆவின் பால்.." வருகிறது புது மாஸ் திட்டம்.. அது என்ன இ-பால் கார்டு! யாருக்கு நன்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவின் கார்டுகாரர்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், பால் விநியோகத்தைச் சீரமைக்கவும் ஆவின் நிறுவனம் இ-பால் கார்டை அறிமுகப்படுத்த உள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆவின் மூலம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் ஆவின் பால் விலை குறைவாகவே உள்ளது. இதனால் மக்கள் ஆவின் பாலை வாங்கவே ஆர்வம் காட்டுகிறார்கள்.

 How Aavin is planning to curb subsidy misuse vi e-milk card

ஆவின் பால் தமிழ்நாடு முழுக்க உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல பால் அட்டைகள் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது பால் அட்டை மூலம் தினசரி 6 லட்சம் லிட்டர் பால் விநியோகிக்கப்படுகிறது.

சந்தையில் ஆவின் ஃபுல் கிரீம் பால் ரூ.60க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கார்டு வைத்திருப்பவர்களுக்கு அது மானிய விலையில் ரூ.46க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தரப்படுத்தப்பட்ட பால் (பச்சை பாக்டெக்) சில்லறை விற்பனையில் 44 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், அது லிட்டருக்கு ரூ.41க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், டோன்டு பாலுக்கும் லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்தே விற்பனை செய்யப்படுகிறது.

இ-பால் கார்டு: இப்போது பேப்பர் அட்டைகள் மூலமே இந்த கார்ட் போடப்படுகிறது. இதில் மானியங்களைச் சிலர் தவறாகப் பயன்படுத்துவதால் பால் விநியோகம் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாசர் நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆவின் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த முறைக்கு மாற்றப்படுவார்கள். மேலும், இத்திட்டத்தின் கீழ் பாலை வீட்டிற்கே கொண்டு சென்று டூர் டெலவரி செய்யும் திட்டமும் உள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியது. முழு கிரீம் பால் (ஆரஞ்சு பாக்கெட்) சில்லறை விலையை லிட்டருக்கு ரூ.48இல் இருந்து ரூ.60 ஆக உயர்த்தியது. ஆனால், கார்டு வைத்திருப்பவர்களுக்கு 48 ரூபாய்க்கே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் போலியாக கார்டு மூலம் வாங்கி கடைகளுக்கு விற்பதாகப் புகார் அழுந்தது. இதுபோல மானியம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க ஆரஞ்சு கார்டுகளை புதுப்பிக்க வாடிக்கையாளர்கள் ரேஷன் கார்டு அல்லது ஆதார் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என ஜனவரி மாதம் ஆவின் நிறுவனம் உத்தரவிட்டது.

போலி கார்டுகள் ஒழிக்கப்படும்: இதன் மூலம் ஆயிரக்கணக்கான போலி கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "இ-கார்டு கொண்டு வரப்பட்டால், ஒவ்வொரு பால் அட்டை நுகர்வோருக்கும் எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது என்பதைக் கண்காணிக்க முடியும். இதன் மூலம் கார்டுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது முற்றிலுமாக ஒழிக்க முடியும்" என்றார்.

கடந்த ஆண்டு டிசம்பரில், சென்னையின் தென் மண்டலத்தைச் சேர்ந்த ஆவின் ஊழியர்கள் மானியத்துடன் கூடிய முழு கிரீம் பாலை வணிக நிறுவனங்களுக்கு விற்பதாகப் புகார் எழுந்தது. இது குறித்து துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் தவறு நடப்பது உறுதியான நிலையில், மார்க்கெட்டிங் துறையில் உதவி பொது மேலாளர் பதவியில் இருக்கும்4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த இ-பால் கார்டு முறை கொண்டு வரப்பட்டால், முறைகேடுகளைப் பெறுமளவு ஒழிக்க முடியும்.

 How Aavin is planning to curb subsidy misuse vi e-milk card

மற்ற முக்கிய அறிவிப்புகள்: பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 200,000 கறவை மாடுகளை வாங்க நபார்டு வங்கியின் துணை நிறுவனமான NABSanrakshan மூலம் ஆவின் பால் பண்ணையாளர்களுக்குக் கடன் வழங்கப்படும். கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ரூ.25 கோடியில் மாட்டுத் தீவன உற்பத்தி ஆலை ஏற்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கு நபார்டு வங்கியின் கீழ் உள்ள கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம் நிதியளிக்கப்படும்.

எருமைப் பால் உற்பத்தியை மேம்படுத்த எருமைக் கன்றுகளை வளர்க்கும் திட்டம் தொடங்கப்படும். அனைத்து பால்பண்ணைகளிலும் பால் பேக்கேஜிங் தானியங்கி முறையில் அமைக்க ரூ.30 கோடி ஒதுக்கப்படும் இப்போது அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் பால்பண்ணைகளில் மட்டுமே இந்த வசதி உள்ளது.

அண்ணா நூற்றாண்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் நல நிதி கணினிமயமாக்கப்படும். தரமான பாலை தரும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். கறவை மாடுகளுக்கு மத்திய அரசின் கால்நடை காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்யப் பால் உற்பத்தியாளர்களுக்கு 50% மானியம் வழங்கப்படும். பால் உற்பத்தியை அதிகரிக்கத் தமிழ்நாடு பால் உற்பத்தி மேலாண்மை கொள்கை உருவாக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+