ஆசிரியர்களை எச்சரிக்கும் கோர்ட் வேலை செய்யாத எம்.எல்.ஏக்களையும் எச்சரிக்க வேண்டும்: கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலை செய்யாத எம்எல்ஏக்களுக்கு ஊதியம் வழங்கப்படும்போது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஏன் கெடுபிடி என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டரில் கமல் எழுப்பியுள்ள கேள்விகள்:

பணியாற்றாத அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாதா? அப்படிாயனால், ரிசார்ட்டுகளில் உள்ள குதிரைபேர அரசியல்வாதிகளுக்கு எப்படி ஊதியம் கொடுக்கப்படுகிறது?

ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை மேதகு நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அதேபோன்ற எச்சரிக்கையை பணியாற்றாமல் உள்ள எம்.எல்.ஏக்களுக்கும் நீதிமன்றம் வழங்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கமல் தனது டிவிட்டுகளில் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
"No work no pay only for Govt. Employees?. How about horse trading politicians languishing in resorts?" Asks Kamal in his tweets.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற