"நான் முதல்வரானாலும்.." ரஜினி என் பெயரை சொல்லும் போது! பூரிக்கும் கமல்ஹாசன்
மதுரை: "நான் முதல்வரானாலும்.." என ரஜினிகாந்த் எனது பெயரை சிரித்துக் கொண்டேதான் சொன்னார் என கமல்ஹாசன் பூரிப்புடன் தெரிவித்தார். மேலும் தனக்கும் ரஜினிக்கும் இடையே போட்டி இருந்திருக்கிறது என்றும் பொறாமை இருந்ததே இல்லை என கமல்ஹாசன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சேயோன் படத்தின் தொடக்க விழாவுக்காக மதுரை வந்துள்ளேன். மதுரைக்கு எப்போது வந்தாலும் அன்பு சூழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

மக்கள்தான் விஜய்க்கு வாக்களித்தார்கள். அவர்கள்தான் ஆட்சியை கண்காணிக்க வேண்டும். நாங்களும் கண்காணிப்போம். முதல்வர் விஜய்யின் ஆட்சிக்கு இன்னும் 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும்.
புதியவர்களை குறைத்தும் மதிப்பிடக் கூடாது. அதிகமாகவும் எதிர்பார்க்கக் கூடாது. ரஜினிகாந்துக்கும் எனக்குமானது போட்டி தானே தவிர பொறாமை இல்லை. கமல்ஹாசன் முதல்வராக இருந்தால் என சிரித்த முகத்துடன் ரஜினி கூறியிருந்தார் என கமல்ஹாசன் பேட்டி அளித்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் வந்ததும் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது வெற்றி பெறும் போது மட்டுமில்லை, கஷ்டகாலங்களிலும் கூட இருப்பேன் என ரஜினி, ஸ்டாலினுக்கு ஆறுதல் சொன்னதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து விஜய் முதல்வராவதை தடுக்க அதிமுக திமுக ஆகிய கூட்டணி ஆட்சி அமைய ரஜினி பேச்சுவார்த்தை நடத்தியதாக பல்வேறு வதந்திகள் பரவின. இதுகுறித்து ரஜினியை பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தேர்தல் முடிவுகள் வந்ததும் என்னை குறித்து சில விமர்சனங்கள் வந்தன.
அந்த விமர்சனங்களை பார்த்துவிட்டு நான் பதில் தராமல் இருந்தால் அது 100 சதவீதம் உண்மையாகிவிடும். தேர்தல் முடிவுகள் வந்ததும் நான் ஸ்டாலினை போய் சந்தித்தேன். கொள்கை, அரசியலுக்கு அப்பாற்பட்டு எங்களது நட்பு 40 ஆண்டுகளுக்கு மேலானது.
அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்தான். நட்பு ரீதியில்தான் ஸ்டாலினை நான் சந்தித்தேன். ஆனால் விஜய் முதல்வராவதை தடுக்க, நான் இரு பெரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது போல் ஒரு தகவல் பரவுகிறது. இப்படி பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு தரங்கெட்ட ஆளு இந்த ரஜினி கிடையாது.
விஜய் முதல்வராவதில் எனக்கு என்ன பொறாமை. அவருக்கும் எனக்கும் 28 வயது வித்தியாசம், அவர் ஜெயித்ததுமே நான் எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துவிட்டேன். ஒரு வேளை கமல்ஹாசன் முதல்வராகியிருந்தால் கூட எனக்கு பொறாமை வந்திருக்குமா என தெரியவில்லை.
காரணம் அவருடன் நடித்துக் கொண்டிருக்கும் படம் போய்விடுமோ என்றுதான் நான் நினைத்திருப்பேன். விஜய் தனியாக போட்டியிட்டு வென்றுள்ளார். எம்ஜிஆர், என்டிஆரை விட அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார். நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் வென்றிருப்பேன்.
நான் ஏன் வரவில்லை என 3 பக்கங்கள் கொண்ட அறிக்கை வெளியிட்டிருந்தேன். விஜய்யை கமல்ஹாசன் சந்தித்துவிட்டார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் எல்லாம் பார்த்துவிட்டார்கள். அவரை சம்பிரதாயத்திற்கு சந்திக்க எனக்கு விருப்பமில்லை. இவ்வாறு ரஜினி பேசினார்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications