டிடிவி தினகரன் எப்படி அதிமுக துணைப் பொதுச்செயலாளராக முடியும்? அமைச்சர் ஜெயக்குமார் சரமாரி கேள்வி!
டிடிவி தினகரன் எப்படி அதிமுக துணைப் பொதுச்செயலாளராக முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் எப்படி அதிமுக துணைப் பொதுச்செயலாளராக முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர் கடந்த வாரம் டிடிவி தினகரனின் நியமனம் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றினர். இதனார் எடப்பாடி பழனிச்சாமிக்கும் டிடிவி தினகரன் தரப்புக்கும் இடையேயான மோதல் முற்றியது.
தனது நியமனத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது குறித்து கருத்து தெரிவித்த டிடிவி டிடிவி தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை 420, போர்ஜரி என்றெல்லாம் விமர்சித்தார். அமைச்சர்களையும் பணத்தை சுருட்டிக்கொள்வதற்கான தனக்கு எதிராக நடப்பதாக குற்றம் சாட்டினார்.

தினகரன் பேச்சுக்கு எதிர்ப்பு
தினகரனின் இந்தப் பேச்சு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை கொந்தளிக்க செய்தது. இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அழகு பார்க்க விரும்பவில்லை
அப்போது ஜெயலலிதா இருந்த பதவியில் யாரையும் வைத்து அழகு பார்க்க விரும்ப வில்லை எனக்கூறினார். தற்போது நடைபெறும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு தினகரன் குடும்பத்தினரின் தலையீடு இல்லாமல் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

நிதானம் தவறுகிறார்
மேலும் அமைச்சர்கள் சுருட்டிக்கொள்ள நினைக்கின்றனர் என டிடிவி தினகரன் கூறியதற்கும் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். டிடிவி தினகரன் நிதானத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

டிடிவி தினகரன் எப்படி?
2011ல் அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் எப்படி துணைப் பொதுச்செயலாளராக முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பெருந்தன்மையோடு இருக்கிறோம்
முதல்வரை 420 என்று கூறியப் பிறகும் தாங்கள் தான் பெருந்தன்மையோடு இருப்பதாகவும் அவர் கூறினார். அதிமுக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவேன் என்று கூறிய ஸ்டாலினை தினகரன் எதிர்த்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications