வயிற்றுப் பிழைப்புக்காக ரிஸ்க் எடுத்து ஆந்திராவில் பலியான 20 தமிழர்கள்!
சென்னை: ஆந்திராவைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் பண ஆசை காட்டி தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை செம்மரங்களை வெட்ட வைக்கின்றனர். வயிற்றுப் பிழைப்புக்காக செம்மரம் வெட்டிய தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் ஆந்திரா போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேஷாசலம் மலைப் பகுதியில் செம்மரம் வெட்டியதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை அம்மாநில போலீசார் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கேட்டதற்கு தற்காப்புக்காக சுட்டதாக பொறுப்பின்றி பதில் அளித்துள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மனித உரிமை ஆணையம் ஆந்திர மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழர்கள்
செம்மரம் கடத்தியதாகக் கூறி சுமார் 2 ஆயிரத்து 300 தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திர மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். நாளைக்கு மூன்று வேளையும் உணவு தருகிறோம் என்று கூறி கடத்தல்காரர்கள் அவர்களை மரம் வெட்ட வைத்துள்ளனர்.

27 பேர் பலி
செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் முன்பு ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்றைய சம்பவத்தில் பலியானவர்களையும் சேர்த்து செம்மரம் வெட்டியதற்காக இதுவரை 27 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

2000 பேர் கைது
செம்மரம் கடத்தியதாகக் கூறி 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, மரத்தின் மதிப்பு பற்றி எல்லாம் எங்களுக்கு தெரியாது, ஒரு மரத்திற்கு ரூ.500 கூலி கொடுப்பார்கள். நாங்கள் வெட்டுவோம், அவ்வளவு தான் என்று தெரிவித்துள்ளனர்.

ரயில்
செம்மரக் கட்டைகளை ரயில்கள் மற்றும் பேருந்துகளில் எடுத்துச் செல்கையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு தாங்கள் எதை எடுத்துச் சென்றோம் என்றே தெியவில்லை. தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட இடத்தில் சரக்கை ஒப்படைத்தால் அவர்களுக்கு ரூ.300 கூலி என்று மட்டும் பேசப்பட்டுள்ளது.

சீனர்கள்
செம்மரக் கட்டை கடத்தல்காரர்களை சீன மாபியா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சீனர்கள் தமிழகம் மற்றும் ஆந்திராவில் செம்மரக் கட்டைகளை கடத்த பலரை பணியமர்த்தியுள்ளனர். சர்வதேச சந்தையில் செம்மரக் கட்டைகளுக்கு கிராக்கி அதிகம் என்பதை சீனர்கள் அறிந்துள்ளனர்.

தமிழக அரசு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுமுத்தல், சோனாபதி, அரங்கம், கூத்தமேடு, வாழவந்தான் ஆகிய வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை தான் செம்மரக் கடத்தல்காரர்கள் குறி வைத்தனர். அரசு அப்பகுதி மக்களுக்கு நிவாரணம் அளிக்காததால் கடத்தல்கார்கள் பணத்தாசை காட்டி அவர்களை எளிதில் தங்கள் வசப்படுத்திவிட்டனர்.

ஏஜெண்டுகள்
கூலிக்கு மரம் வெட்ட ஏஜெண்டுகள் மூலமாக தான் ஆட்களை எடுக்கிறார்கள். அந்த ஏஜெண்டுகளோ வாரத்திற்கு ரூ.80 ஆயிரம் சம்பளம் பெறுகிறார்கள். மரம் வெட்டுபவர்களை சுரண்டி வாழ்கிறார்கள். மரம் வெட்டும் இடங்களுக்கு ஏஜெண்டுகள் வர மாட்டார்கள். அதனால் போலீசாரிடமும் சிக்க மாட்டார்கள்.

ஆந்திர அரசு
செம்மரக் கடத்தல் விவகாரம் ஆந்திர அரசின் கையை மீறிச் சென்றுவிட்டது. குறிப்பிட்ட கண்காணிப்பு குழு வந்தால் அவர்களை தாக்குமாறு மரம் வெட்டுபவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் மரம் வெட்டுபவர்கள் கண்காணிப்பு குழுக்கள் வந்தால் கற்களை வீசுவார்கள் அல்லது சில நேரம் அரிவாளால் தாக்க முயல்வார்கள்.

நஷ்டஈடு
மரம் வெட்டுகையில் கைது செய்யப்படுபவர்களை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர ஏஜெண்டுகள் முயற்சி செய்வது இல்லை. அதனால் அவர்கள் சிறையில் வாடுகிறார்கள். மேலும் மரம் வெட்டுகையில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்படுபவர்களுக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்குவது இல்லை. அவர்கள் குற்றம் செய்ததால் இழப்பீடு கிடையாது.

தமிழர்கள்
செம்மரம் வெட்டச் செல்லும் தமிழர்கள் பணம் இல்லாததால் தான் அந்த தொழிலுக்கு செல்கிறார்கள். அதனால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்தால் அவர்கள் செம்மரம் வெட்ட செல்ல மாட்டார்கள்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications