மெரீட் மாணவனை நீட் எப்படி வஞ்சிக்கிறது? நீட் மோசடிகள் என்ன? புட்டு புட்டு வைத்த கல்வியாளர்கள்!
நீட் தேர்வு முடிவுகள் வெளியானது முதலே அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் இந்தாண்டு மொத்தம் 67 பேர் 720க்கு 720 என்று முழு மார்க் பெற்றுள்ளனர்.
கடந்தாண்டு வெறும் 2 பேர் மட்டுமே 720க்கு 720 மார்க் பெற்ற நிலையில், இந்தாண்டு 67 மாணவர்கள் பெற்றுள்ளதே சர்ச்சைக்குக் காரணமாகும். இது தொடர்பாகப் பலரும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்திய அளவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான். இப்போது அதில் மகாராஷ்டிராவும் சேர்ந்துள்ளது.
உண்மையில் நீட் தேர்வு என்பது மாணவர்களை வஞ்சிக்கும் செயலா? அது குறித்து பிரின்ஸ் கஜேந்திரபாபு, "ஏதோ 'நீட்' தேர்வில் இப்போதுதான் குளறுபடி நடந்ததைப் போல பலர் பேசுகிறார்கள். விவாதிக்கிறார்கள். 'நீட்' பரீட்சையை எப்போது அறிமுகம் செய்தார்களோ, அன்று முதல் முறைகேடுகள் நடந்தபடிதான் உள்ளன. தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் உட்படப் பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை பல தேர்வுகளை நடத்துகின்றன.
இந்தத் துணைவேந்தர்களிடம் யாராவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகப் போகும் நாளில் உங்களது தேர்வு முடிவுகளை வெளியிடுவீர்களா? என்று ஒரு விளக்கத்தைக் கேட்டுப் பார்க்கச் சொல்லுங்கள். எந்தக் கல்வி நிறுவனங்களும் இதைப்போன்று செய்ய மாட்டார்கள்.
ஆனால், நாடு தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நேரத்தில் முன்னறிவிப்பே இல்லாமல் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்கள். தேர்தல் ஆணையம் சில மாதங்கள் முன்பே தேதியை அறிவித்துவிட்டது. அதை அறிந்திருந்து இதைச் செய்கிறார்கள்.
ஆக, நீட் என்பதே மாணவர்களின் நலனுக்கு எதிரானது. 92ஆவது நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையை எடுத்துப் பாருங்கள். அதில் பாஜகவைச் சேர்த்தவர்கள்தான் பாதிக்கும் மேலாக உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அந்தக் குழுவே தெளிவாகச் சொல்கிறது, தனியார் நீட் தேர்வு மையங்களில் முறைகேடு நடக்கிறது என்று.

அதில் ஒருவருக்கு 50 லட்ச ரூபாய் செலவாகிறது. இவ்வளவு பணம் செலவு செய்து ஒருவரால் மருத்துவராக முடியுமா? ஆகவே, தனியார் கல்லூரிகளுக்கு வேண்டுமானால் தேர்வை நடத்துங்கள். எந்தெந்த மாநிலங்கள் விலக்கு கேட்கிறதோ அதைக் கொடுத்துவிட்டுத் தேர்வை நடத்துங்கள் என்று குழு பரிந்துரைத்துள்ளது.
நீட் தேர்வு என்பதே முறைகேடுகளைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக நிலை என்ன? முறைகேடுகள் பெருகியுள்ளது. 50 லட்சம் எனக் குழு சுட்டிக்காட்டி உள்ளது இல்லையா? அதுவே விதிமுறைக்குப் புறம்பாக வாங்கப்பட்டும் தொகை.
2019 நேஷனல் மெடிக்கல் கமிஷன் ஆக்ட் என்ன சொல்லி இருக்கிறது தெரியுமா? 50% இடங்களுக்கு மட்டுமே கட்டணம் கட்டுப்படுத்தப்படும். மீதி உள்ள இடங்களைக் கட்டுப்படுத்த மாட்டோம் எனக் கூறியுள்ளது.
அப்படி என்றாலே அது வணிகம்தானே? பள்ளிக் கல்வி நடத்துகின்ற தேர்வில் கிரேஸ் மார்க் கொடுப்பதும் சலுகை அடிப்படையில் மதிப்பெண் தருவது தவறு என்றுதான் நீட் வந்தது. இப்போது இவர்களே கொடுத்துள்ளார். அப்படி என்றால், இது மட்டும் எப்படி தரமான பரீட்சையாக இருக்க முடியும்?" என்கிறார்

கல்வியாளர் நெடுஞ்செழியன், "நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி நாங்கள் செய்தது தவறு, இனிமேல் நாங்கள் தார்மீகமாக இந்தத் தேர்வையே நடத்த மாட்டோம் என்று விட்டுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யவில்லை.
2013 இல் நீட் தேர்வு முடிவுகள் வெளியானபோது இந்தியா அளவில் வெற்றி பெற்றவர் பட்டியல், மாநில அளவில் வெற்றி பெற்றவர் பட்டியல் எனப் பல வகையான டேட்டாக்களை வெளிப்படையாக அறிவித்தார்கள்.
ஆனால், இப்போது சில ஆண்டுகளாக எந்த டேட்டாவையும் முழுமையாக வெளியிடுவதில்லை. அதில் வெளிப்படைத்தன்மையும் இல்லை. ஒரு மாணவன் எந்த மாநிலத்திற்கும் போய் இருப்பிடச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு தேர்வு எழுதலாம். இதனால் மெரீட் அடிபட்டு போகிறது.
மதிப்பெண் அதிகம் வாங்கிய மாணவன் பணம் இல்லை என்பதால் மருத்துவராக முடியவில்லை. பணம் இருப்பவர் குறைந்த மார்க் எடுத்துவிட்டு உள்ளே போய் மருத்துவராகிறார்.

இது என்ன முறை? இதில் எங்கே திறமை, தகுதி இருக்கிறது? ஒரு கிராமத்து மாணவர் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணம் இல்லை என்றால் டாக்டர் ஆக முடியாது. அப்படி என்றால் அரசு என்ன செய்ய வேண்டும். மெரீட் மாணவனுக்கான பணத்தை அரசே ஏற்க வேண்டும்.
அதைச் செய்யாததால் மெரீட் மாணவன் வஞ்சிக்கப்படுகிறான்" என்கிறார் இவர்.
-
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications