தொழில்நுட்ப வளர்ச்சி அத்தனையையும் தமிழகம் எப்படி பயன்படுத்துகிறது பாருங்கள்? ராமதாஸ் வேதனை!
ஆப்பில் பணம் செலுத்தினாலும் மதுக்கடைக்கு சென்று தான் மது அருந்த வேண்டும் என்ற தமிழக அரசின் திட்டம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஆப்பில் பணம் செலுத்தினாலும் மதுக்கடைக்கு சென்று தான் மது அருந்த வேண்டும் என்ற தமிழக அரசின் திட்டம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு முழு முயற்சியாக ஈடுபட்டு வருகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மாநில அரசுகளும் முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வீடு வீடாக சென்று மது விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான ஆப்பும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

ரூ.100கோடிக்கும் அதிகமாக
தமிழக அரசு 5,000க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை நடத்தி வருகிறது.
இவற்றில், தினமும் சுமார் ரூ. 70 கோடி வரையும், விடுமுறை தினங்களில், ரூ. 100 கோடிக்கும் அதிகமான, மது வகைகள் விற்பனையாகின்றன.

வீட்டிற்கே சென்று
வீடு தேடிச் சென்று உயர்வகை மதுபானங்களை டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசு மீது அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.

அந்த நோக்கமில்லை
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதில் டாஸ்மாக் நிறுவனத்தால் வீடுகளுக்கு நேரடியாக மதுபானங்களை விற்பனை செய்யும் நோக்கம் ஏதுமில்லை என தெரிவித்துள்ளனர்.

அறிமுகம் செய்திட முடிவு
மேலும், மொபைல் இ-வேலட் மூலம் பணம் செலுத்தும் முறையை உயர்வகை மதுபானங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மதுவகைகளை விற்பனை செய்யும் மால் கடைகளில் அறிமுகம் செய்திட ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் இது பணமில்லா பரிவத்தனைக்கான மற்றொரு முயற்சி என்றும் தெரிவித்தனர்.
|
ராமதாஸ் வேதனை
டாஸ்மாக் அதிகாரிகளின் விளக்கத்துக்கு ராமதாஸ் டிவிட்டரில் பதில் தெரிவித்துள்ளார். அதாவது வீடு, வீடாக மது விற்பனை இல்லை. ஆப்பில் பணம் செலுத்தினாலும் மதுக்கடைக்கு சென்று தான் மது அருந்த வேண்டும் - டாஸ்மாக் - அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி அத்தனையையும் தமிழகம் எப்படி பயன்படுத்துகிறது பாருங்கள்? என அவர் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications