ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு தயாரிப்பது எப்படி?- போலீஸாரை உறைய வைத்த கோவை ஆசாமி
ரூ. 2 ஆயிரம் கள்ளநோட்டு தயாரிப்பது எப்படி என்று குறித்து வாக்குமூலம் கொடுத்த போலீஸாரையே உறைய வைத்தார் கோவை ஆசாமி ஒருவர்.
கோவை: கோவையில் இரண்டாயிரம் ரூபாய் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டு குடோன் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ' சுமார் ஒரு கோடி வரையில் கள்ளநோட்டுக்களைப் புழக்கத்தில் விடுவதற்குத் திட்டமிட்டிருந்தனர். கமிஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்கின்றனர் கோவை மாநகர போலீஸார்.
செயின் பறிப்பு மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறவர்களைப் பிடிப்பதற்காக, புதிய யுக்தி ஒன்றை கோவை போலீஸார் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி, ஒரு இடத்தில் பணிபுரியும் போலீஸார், வாகன சோதனைக்காக வேறு இடத்துக்கு மாற்றப்படுகின்றனர்.
வாகனத் தணிக்கை நிறைவடைந்ததும் அவர்கள் பழையபடி தங்கள் காவல்நிலையத்துக்கே சென்று விடுகின்றனர். அந்த வகையில் நேற்று மாலை 6.30 மணியளவில் தடாகம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார் ரேஸ்கோர்ஸ் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ்.

பாக்கெட் சோதனை
அப்போது அந்த வழியாக டூ வீலரை ஓட்டிக் கொண்டு வந்த வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை சோதனையிட்டனர். அவருடைய செயல்பாடுகள் எல்லாம் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கவே, அவரது பாக்கெட்டை சோதனையிட்டனர்.

சிறப்பான கவனிப்பு
அப்போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் அகப்பட்டன. வழக்கமான நோட்டுக்களைவிடவும் இலேசான தடிமனில் இருந்த அந்த நோட்டுக்களைப் பார்த்த இன்ஸ்பெக்டருக்கு சந்தேகம் ஏற்படவே, ஆனந்தை சிறப்பாகக் கவனித்தனர்.

பறிமுதல்
ஒருகட்டத்தில், 'நண்பர்களுடன் சேர்ந்து கள்ள நோட்டு தயாரித்து வருகிறேன். இதுவரை எங்கும் சிக்கியதில்லை' எனக் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், இன்று காலை வேலாண்டிபாளையத்தில் உள்ள ஆனந்தின் கடையில் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் ஒரு கோடி ரூபாய் அளவுக்கான 2 ஆயிரம் கள்ள நோட்டுக்கள்(5904 நோட்டுக்கள்) பறிமுதல் செய்யப்பட்டன.

ஏமாற்றம்
சாக்கு மூட்டையில் கட்டப்பட்டவாறு ரூபாய் நோட்டுக்கள் இருந்துள்ளன. கம்ப்யூட்டர் மூலம் வடிவமைக்கப்பட்டு கலர் ஜெராக்ஸில் பிரிண்ட் எடுக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை, கோவை மாநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாகக் கொடுத்து ஏமாற்றி வந்துள்ளதும் கண்டறியப்பட்டது.

நோட்டடிக்கும் மிஷின் பறிமுதல்
இதையடுத்து, ஆனந்த் மீது 449, 489 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர் போலீஸார். ஆனந்தின் கடையில் இருந்து பிரிண்ட்டர், இங்க் பாட்டில், ஜெராக்ஸ் மிஷின், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications