59 பேரின் உயிரை குடித்த மெத்தனால்.. கள்ளக்குறிச்சிக்கு எப்படி வந்தது? மேலும் 6 பேர் கைது- பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 59 பேர் பலியாகி உள்ள நிலையில் பெரிய நிறுவனங்களிடம் இருந்து மெத்தனால் வாங்கி தனிநபர்களுக்கு விற்பனை செய்தது தொடர்பாக 6 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18 ம் தேதி மாலையில் பலரும் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அதன்பிறகு அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 150க்கும் அதிகமானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

kallakurichi Liquor Death Tamil Nadu

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக பலரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். தற்போது வரை 59 பேர் வரை இறந்துள்ளனர். இன்னும் சிலர் உயிருக்கு போராடும் நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளனர். விரைவில் அனைவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர்.

கள்ளச்சாராயம் குடித்து 59 பேர் வரை பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய ஸ்டாலின், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த விசாரணையின்போது மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து அனைவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து கள்ளச்சாராயம் விற்றவர்கள் மற்றும் மெத்தனால் சப்ளை செய்தவர்கள் பற்றி போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் , அவருடைய மனைவி சந்திரா, சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை கைது செய்யப்பட்டனர்.

அதோடு மெத்தனால் விற்பனையில் தொடர்புடைய சங்கராபுரம் அரியூரை சேர்ந்த ஜோசப்ராஜா, லூர்துசாமி, சூசைநாதன், மாதவச்சேரி ராமர், மரக்காணத்தைச் சேர்ந்த மதன்குமார், கடலூர் தம்பிப்பேட்டையைச் சேர்ந்த ராஜா, மாதேஷ், மாதேஷுக்கு ஜிஎஸ்டி எண்கள் வழங்கி உதவிய சக்திவேல், மீன் வியாபாரி கண்ணன், மாதேசுக்கு மெத்தனால் வழங்கிய சிவக்குமார், சேலம் மாவட்டம் கருமந்துறை கல்லாநத்தம் சங்கர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தான் தற்போது மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெத்தனால் ஆலை உரிமையாளர்களான பென்சிலால், கவுதம் லால் ஜெயின், மெத்தனாலை விநியோகம் செய்த சடையன், ரவி, செந்தில், ஏழுமலை ஆகிய ஆறு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் கள்ளக்குறிச்சிக்கு இவர்கள் மூலம் மெத்தனால் சப்ளை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது 22 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+