அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஆற்று மணலை கொள்ளையடித்த மாஃபியாக்களுக்கு ஆப்பு! #sandquarry
Recommended Video

சென்னை: மணல் குவாரி தொழில் என்பது தமிழகத்தில் அரசியலுடன் இணைத்து பார்க்கப்படுவதாக உள்ளது. மணல் குவாரி அதிபர்கள் அரசில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்களாகவே இருக்கிறார்கள்.
அனைவருக்குமே தெரிந்த ஒரு உதாரணம், சேகர் ரெட்டி. கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் போயஸ் கார்டன் லாபியில் நெருக்கமான சேகர் ரெட்டி தமிழ்நாட்டில் பல இடங்களில் மணல் குவாரியை குத்தகைக்கு எடுத்தார். இதன் மூலம் கோடி கோடியாக கொட்டியது.
இப்போது துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வமும், சேகர் ரெட்டியும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஒன்றாக வருவது போன்ற போட்டோக்கள் எதிரணியால் இப்போதும் இணையத்தில் சுழன்று வருகிறது.

சேகர் ரெட்டி
சேகர் ரெட்டியை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என வளைத்து எடுத்து சிறைக்குள் தள்ளியது சமீப காலத்து வரலாறு. இவர் ஒரு உதாரணம் மட்டுமே. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சியாளர்களில் அதிகாரம் படைத்தோரை கைக்குள் போட்டுக்கொள்வது இதுபோன்ற மணல் குவாரி உரிமையாளர்கள் வாடிக்கை.

ஐடி ரெய்டு
இதேபோல சமீபத்தில் சசிகலா உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை மெகா ரெய்டு நடத்தியது. அப்போது, மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமிக்கு சொந்தமான 7 இடங்களில் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர் வருமான வரித்துறையினர்.

மேற்குமண்டலம்
ஆறுமுகசாமிதான் மேற்கு மண்டலத்தில் மிகப்பெரிய மணல் ஒப்பந்ததாரர். அரசு மணல் குத்தகைகளை இவர்தான் பெரும்பாலும் எடுத்து மேற்கொள்வார். ஆறுமுகசாமி, சசிகலாவின் ஆதரவாளராக அறியப்படுகிறார்.

ஏரியா பிரித்து அள்ளினர்
இப்படி பெரும் தொழிலதிபர்கள் மண்டலம் மண்டலமாக பிரித்துக்கொண்டு ஆற்று மணலை அள்ளி குவித்தனர். ஆனால் அளவுக்கும் அதிகமாக மணலை சுரண்டி தீர்த்ததால் நிலத்தடி நீர் மட்டம் கீழே போய், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி தமிழகம் பாலைவனமாகும் சூழல் உருவானது. இந்த நிலையில்தான், ஹைகோர்ட் மதுரை கிளை மணல் குவாரிகளுக்கு அதிரடி தடையை விதித்துள்ளது. இது சமூக ஆர்வலர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications