சசிகலாவின் விரல் நுனியில் தமிழக நிகழ்வுகள்.. எப்படி சாத்தியம்?
பெங்களூர் சிறையில் இருந்தவாறே தமிழகத்தில் நடைபெறும அரசியல் சூழல்கள் குறித்து அவ்வப்போது தகவல்களை பெறுவது எப்படி?
சென்னை: தமிழக சட்டசபை அமளி, நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை பெங்களூர் சிறையில் இருந்தவாறே ஆர்வமாக கவனித்து வருகிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் குளிர்சாதன அறை, தொலைக்காட்சிப் பெட்டி, வீட்டுச் சாப்பாடு, மேல்நாட்டு கழிப்பறை உள்ளிட்ட சலுகைகளை சிறைத் துறையினரிடம் கேட்டார்.

எனினும் அதற்கு மறுப்பு தெரிவித்த சிறைத் துறை, சசிகலாவை சாதாரண அறையிலேயே தங்க வைத்துள்ளது. மேலும் தமிழக சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரங்களை சிறை அறையில் இருந்தவாறே பார்ப்பதற்காக டிவி வைக்குமாறு சிறப்பு அனுமதி கோரியிருந்த சசிகலாவுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு மறுப்பு தெரிவித்த சிறைத் துறை அதிகாரிகள், சசிகலாவை அடைக்கப்பட்டுள்ள அறையில் அவருக்கென்று சிறப்பு அனுமதியின் பேரில் டிவி வழங்கப்படவில்லை. மேலும் பொதுவாக டிவி வைக்கப்பட்டுள்ள பகுதியில் அமர்ந்து பார்த்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது என்றனர்.
எனினும் தன்னை பார்க்க சிறைக்கு வரும் வக்கீல்களிடமிருந்து தமிழக அரசியல் நிலவரங்களை சசி ஆர்வமாக கேட்டு தெரிந்து கொள்வதாகவும், கட்சி நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய விஷயங்களையும் அவ்வாறே தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் தனக்கென டிவி எதுவும் இல்லாவிட்டாலும் கூட, சிறை அறைக்குள் முடங்கியிருந்தாலும் கூட தனது வக்கீல்கள் மூலமாக தமிழக நிகழ்வுகளை ஒன்று விடாமல் சசிகலா அறிந்து வைத்திருப்பதாகவும், அதைக் கொண்டு உரிய உத்தரவுகளை அவர் பிறப்பித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிறைக்குள் வந்தவுடன் அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அவருக்கு பட்டியல் வழங்கப்பட்டதாகவும், அதில் அவர் மெழுகுவர்த்தி தயாரிப்புப் பணியை மேற்கொள்வதாக தேர்வு செய்தபோதிலும் அந்தப் பணியை அவர் இதுவரை தொடங்கவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications