ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விபரீத ஆசை.. உயிரை விட்ட 2 கல்லூரி மாணவர்கள்.. என்ன நடந்தது?
தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு மாணவரின் உடலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள நாகர்கூடல் ஆற்றுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி என்வருடைய மகன் பாலகிருஷ்ணன். இவருக்கு 21 வயது ஆகிறது. இவா் பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. (தமிழ்) மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இவருடைய நண்பர் அதியமான்கோட்டை அடுத்த ஆத்துகொட்டாய் பகுதியை சேர்ந்த முல்லைவேந்தன் என்பவருடைய மகன் தனுஷ் (19). தனுஷ் தருமபுரியில் உள்ள தனியாா் கல்லூரியில் பாா்மஸி படித்து வந்தாா்.
இதேபோல் தீா்த்தமலை அருகே உள்ள ஆண்டியனூா் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சாமுவேல் (19). இவர் ஆட்டுக்காரம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் டி.பார்ம் படித்து வந்தார். இவர்கள் 3 பேரும் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் அஞ்செட்டியில் உள்ள கோவிலுக்கு சென்றனர்.

பின்னர் வீட்டுக்கு திரும்பும்போது ஒகேனக்கல் சென்றர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் ஆலம்பாடி ரங்கநாதா் கோயில் எதிரில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்தனா்.
அப்போது அவர்களுக்கு விபரீத ஆசை வந்துள்ளது. ஆற்றினை ஒரு கரையில் இருந்து மறு கரையை கடந்து நீந்திச் செல்ல முயன்றுள்ளனா். இதில் பாலகிருஷ்ணன், தனுஷ் ஆகியோா் எதிா்பாராதவிதமாக ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டதால் நீரில் மூழ்கிவிட்டார்கள். அவர்களை காப்பாற்ற சாமுவேல் முயன்றும் முடியவில்லை. இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். ஆனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை-
இதுகுறித்து மற்றொரு நண்பரான சாமுவேல், ஒகேனக்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே நிகழ்விடத்திற்கு வந்த ஒகேனக்கல் காவல் நிலைய போலீஸாா், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் அங்கு வந்தனர். அவர்கள் புளியந்தோப்பு பகுதியில் உள்ள காவிரி ஆற்றிலிருந்து பாலகிருஷ்ணன் உடலை நீண்ட நேரம் தேடுதலுக்கு பின்னர் மீட்டனர்.
இதையடுத்து ஒகேனக்கல் போலீசார் பாலகிருஷ்ணன் உடலை பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மாணவர் தனுஷின் உடலை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கல்லூரி மாணவர்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓகேனக்கல் என்று இல்லை, எந்த ஆற்றில் குளிக்க செல்வதாக இருந்தாலும், குளத்தில் குளிக்க செல்வதாக இருந்தாலும், மழைக்காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆழமான பகுதிக்கு செல்லக்கூடாது. ஓகேனக்கல் போன்ற இடங்களில் அரசு அறிவுறுத்திய இடங்களில் மட்டுமே குளிக்க வேண்டாம். ஆபத்தான பகுதிக்கு செல்லவே கூடாது. அப்படி சென்றால் அது விபரீதத்தில் முடிந்துவிடும்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications