இந்த சமுதாயமே இப்படித்தான்! கார்த்தியாயினி பேசும் போதே.. வாயை மூடும்மா! குறுக்கிட்ட விசிக நிர்வாகி
சிதம்பரம்: சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை பார்த்து விசிக நிர்வாகிகள் வாயை மூடும்மா என்று கூறியதும் அதற்கு பதிலடியாக "இந்த" சமுதாய மக்களே இப்படித்தான் என்று கார்த்தியாயினி கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக சார்பாக சிதம்பரம் தொகுதிக்கு பி கார்த்தியாயினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயரான கார்த்தியாயினி கடந்த 2017ல்தான் பாஜகவில் போய் இணைந்தார்.

சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் அரசியலுக்குள் நுழைந்தவர் கார்த்தியாயினி. இவர் செய்த சில சம்பவங்கள் காரணமாக ஒரு காலத்தில் தேசிய அளவில் சர்ச்சைகளுக்கு உள்ளானார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இவர் செயல்பட்ட விதத்தை வேலூர் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
அப்படி ஒரு அதிரடி அரசியலை செய்தவர் கார்த்தியாயினி. இவரது அதிமுக அரசியலில் மறக்க முடியாத பாடத்தை சென்னை உயர்நீதிமன்றம் கற்றுக் கொடுத்தது நீதிபதி குன்ஹா தீர்ப்பு விவகாரத்தில்தான். அப்போது இவர் செயல்பட்ட விதம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.
வேலூர் மாநகராட்சி மேயராக 2011ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர் கார்த்தியாயினி. திமுக வேட்பாளர் ராஜேஸ்வரியை கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சாதனை படைத்தார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்த தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவை விமர்சித்து தீர்மானம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் கார்த்தியாயனி.
தேசிய அளவில் அப்போது சர்ச்சையானவர் இவர். பொதுவாக நீதிபதிகளை விமர்சிக்க கூடாது என்பதை மறந்து மேயர் பொறுப்பில் இருந்தும் கூட, ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்க அதிமுகவினர் நடத்திய ஜால்ரா போராட்டங்களிலேயே மிகவும் ஷாக்கான விஷயம் இதுதான். கார்த்தியாயினி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர். அவரது உருவபொம்மையையும் எரித்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேயரின் செயல் சட்டத்திற்குப் புறம்பான செயல். நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தன. சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும், அதை பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்டிய மேயர் கார்த்தியாயினி தீர்மானம் போட்டதற்காகவும், கொடும்பாவி கொளுத்தியதற்காகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.
அதன்பின் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக பாசம் எல்லாம் போய் பாஜகவில் ஐக்கியம் ஆனவர் கார்த்தியாயினி. இப்பொது சிதம்பரம் தொகுதிக்கு பி கார்த்தியாயினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில்தான் தற்போது இதே கார்த்தியாயினி பிரச்சாரத்தின் போது புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
சர்ச்சை: நேற்று அரியலூர் ஒன்றியத்தில் மணக்கால் கிராமத்தில் அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் எதிர் வேட்பாளர் விசிகவின் திருமாவளவனை கடுமையாக எதிர்த்து பேசினார். கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து அங்கே கார்த்தியாயினி பேச்சை குறுக்கிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி அரியலூர் ஒன்றிய பொருளாளர் பூமிநாதன் அவரின் பேச்சை நிறுத்தும்படி கூறினார்.
பேசாதே வாயை மூடு! வாயை மூடும்மா என்று கடுமையாக கத்தி பேசினார். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கே பதற்றம் ஏற்பட்டதால் குறுக்கிட்ட போலீசார்.. பூமிநாதனை அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியே அனுப்பினர்.
இதை தொடர்ந்து பேசிய பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, இந்த சமுதாயம் அராஜகம் பண்ற சமுதாயம்னு வெளிய காட்றாங்க. இதனால் தான் மற்ற சமுதாயத்தினர் நம்மளை மதிப்பதில்லை. மற்ற சமுதாய மக்கள் நம்மை இதன் காரணமாகவே நம்மை மதிப்பது இல்லை.
நானும் இதே சமுதாயம்தான். நான் ஒரு பட்டியல் இனத்தை சேர்ந்த பெண். இந்த சமுதாய மக்களில் ஏழைகள்தான் இருக்கிறார்கள். பணக்காரர்கள் இல்லை. காரணம் நமக்கான உதவிகள் கிடைப்பது இல்லை. ஆண்டு ஆண்டுகாலம் கையை கட்டிதான் நிற்கிறோம். இந்த நிலை தொடர கூடாது. எனக்கு வாக்களித்தால் மத்திய அரசின் நிதி உதவிகளை உங்களிடம் கொண்டு வந்து கொடுப்பேன், என்று கார்த்தியாயினி கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications