சண்டை போட்டு அம்மா வீட்டுக்குச் சென்ற மனைவி: விஷம் குடித்து கணவர் தற்கொலை!
பண்ருட்டி: பண்ருட்டியில் மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த மறுத்த காரணத்தினால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டியை அடுத்த பைத்தாம்பாடி காலனியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் மனோன்மணி. இவருக்கும், உளுந்தூர் பேட்டையை அடுத்த ஆனைவாரி காலனியை சேர்ந்த பாலமுருகன் என்ற தொழிலாளிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
எனினும் இந்த தம்பதிக்கு குழந்தைப்பேறு கிட்டவில்லை. சமீப காலமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதனால் கணவனிடம் கோபித்து கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோன்மணி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். எனவே மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர அங்கு பாலமுருகன் சென்றார்.
ஆனால் மனோன்மணி குடும்பம் நடத்த கணவன் வீட்டுக்கு வர மறுத்து விட்டார். இதனால் விரக்தியடைந்த பாலமுருகன், மதுபாட்டிலில் விஷம் கலந்து குடித்து மாமனார் வீட்டு முன்பு மயங்கி விழுந்தார்.
உயிருக்கு போராடிய பாலமுருகனை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரபாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications