கள்ளக்காதலை கண்டித்த ‘காதல்’ மனைவியைக் கொன்ற கணவன்
ஊத்துக்கோட்டை: கள்ளக்காதலைக் கண்டித்ததிற்காக மனைவி மீது அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்த வாலிபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையத்தை அடுத்த வெங்கல் குப்பம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் காளிமுத்து (30). இவரது மனைவி பெயர் நதியா (27). ஒரே பகுதியைச் சேர்ந்த இருவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து மணம் புரிந்தவர்கள். இவர்களுக்கு பிரியா (8), ஆண்ட்ரியா (5) என இரு மகள்களும், ராக்கி (2) என்ற ஒரு மகனும் உள்ளான்.
இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக காளிமுத்துவுக்கு சோழவரத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வருவதாகத் தெரிகிறது. இதை அறிந்த நதியா கணவரைக் கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
தனது கணவரின் நடவடிக்கைகள் சரியில்லை என தன் அண்ணன் கலைவாணனிடம் தெரிவித்துள்ளார் நதியா. அவரும் இது தொடர்பாக காளிமுத்துவைக் கண்டித்துள்ளார். இதனால் நதியா மீது மேலும் ஆத்திரம் அடைந்த காளிமுத்து அவரை அடித்து, உதைத்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை இது தொடர்பாக தம்பதியிடையே மீண்டும் பிரச்னை வெடித்துள்ளது. அப்போது நதியாவை காளிமுத்து அடித்துள்ளார். பின்னர் வெளியே சென்ற காளிமுத்து இரவு 11 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியைக் கண்டதும் மேலும் கோபமடைந்த காளிமுத்து, சமையல் அறையில் இருந்த அம்மிக் கல்லை எடுத்து வந்து நதியாவின் தலையில் தாக்கியுள்ளார்.
இதனால் தலையில் பலத்த காயமடைந்த நதியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார். அப்போது எதேக்சையாக தங்கையைக் காண நதியாவின் அண்ணன் கலைவாணன் வீட்டுக்கு வந்துள்ளார். கலைவாணனைக் கண்டதும் காளிமுத்து தப்பி ஓடி விட்டார். ஏதோ விபரீதமாக நடந்துள்ளதை ஊகித்த கலைவாணன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, நதியா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அதனைத் தொடர்ந்து கலைவாணன் அளித்த புகாரின் பேரில் வெங்கல் இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் வெங்கல் போலீசில் காளிமுத்து சரண் அடைந்ததைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் காளிமுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications