மனைவியுடன் கள்ளக்காதல்.. 2 குழந்தைகளின் தந்தையை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற கணவர்
ஈரோடு: ஈரோடு அருகே தனது மனைவியுடன் விடாப்பிடியாக கள்ளக்காதலில் திளைத்து வந்த 2 பெண் குழந்தைகளுக்குத் தந்தையான தபால் ஊழியரை, அப்பெண்ணின் கணவர் மண்வெட்டியால் வெட்டிக் கொன்று விட்டார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பனங்காட்டூர் காலனியை சேர்ந்தவர் குமார். 40 வயதாகும் இவருக்கு லோகுமணி என்ற மனைவியும்,. 17, 15 வயதில் இரு மகள்களும் உள்ளனர்.
கோபிச்செட்டிப்பாளையம் தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக இருந்து வந்தார் குமார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் காளி. 45 வயதான இவரது மனைவி பெயர் ஆராயி. இவர்களுக்குக் குழந்தை கிடையாது. காளி, கூலித் தொழிலாளி ஆவார்.
குமாருக்கும், ஆராயியிக்கும் இடையே கள்ளக்காதல் மூண்டது. இருவரும் அடிக்கடி தனியாக ஒதுங்கத் தொடங்கினர். இது காளிக்குத் தெரிய வந்தது. வெகுண்டெழுந்தார். மனைவியைக் கண்டித்தார். குமாரையும் கண்டித்தார். ஆனால் அவர்கள் திருந்தியபாடில்லை. இந்த நிலையில் இருவரையும் நெருக்கமான கோலத்தில் படுக்கையில் வைத்துப் பார்த்து விட்டார் காளி.
இதையடுத்து மனைவியிடம் கடுமையாக சண்டை போட்டுள்ளார் காளி. இதையடுத்து ஆராயி கணவரை விட்டுப் பிரிந்து தாய் வீடு போய் விட்டார். அம்மா வீட்டுக்குப் போனதும், இன்னும் வசதியாகப் போய் விட்டது ஆராயிக்கு. இஷ்டத்திற்கு குமாரை வரவழைத்து ஜாலியாக இருந்து வந்துள்ளார்.
இதை அறிந்த காளி மேலும் கோபமடைந்தார். இந்த நிலையில், நேற்று மாலை கோபி ரோட்டில் மாரப்பம்பாளையம் பிரிவில் காளி வந்தபோது அங்கு குமாரும் சைக்கிளில் வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு முற்றியது. இதையடுத்து குமாரின் சைக்கிளின் பின்புறம் வைத்திருந்த மண்வெட்டியை எடுத்து குமாரை சரமாரியாக தலையில் அடித்தார் காளி. இதில் குமார் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து இறந்து போனார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து காளியைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications