காதல் கண்ணை மட்டுமல்ல.. கணவனையும் மறைச்சிடுச்சே.. ஓடிப்போன மனைவி.. போலீஸ் ஸ்டேசனில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: காதல் கண்ணை மட்டுமல்ல.. கணவனையும், குழந்தைகளையும் மறைத்திருக்கிறது.. திருமணத்தை மீறி வேறு ஒருவருடன் உறவு வைத்திருந்த மனைவி, காதலனுடன் தலைமறைவானார். இதனால் குழந்தைகளுடன் பரிதவித்து வரும் கணவன் போலீசார் நடவடிக்கை எடுக்க வலிறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

திருமணத்தை மீறி உறவு பலகுடும்பங்களில் உறவு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.பல குடும்பங்களை நிலைகுலைய வைத்துள்ளது. ஆண் அல்லது பெண் யாரோ ஒருவர் திருமணத்தைமீறிய உறவில் செல்வது, சமூகத்தில் அவமானகரமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. பல குடும்பங்களின் பிரச்சனைக்கு திருமணத்தை மீறிய உறவு முக்கியமான காரணமாக உள்ளது.

Husband protests in Tiruppathur to find his missing wife

அப்படி ஒரு சம்பவம் தான் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. மனைவியை பறிகொடுத்தவர் திருப்பத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் குறித்து இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி கணவர் போராட்டம் நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் அடுத்த பொம்மிக்குப்பம் பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 36 வயதாகும் மதன்குமாருக்கும் பள்ளவள்ளி பகுதியைச் சார்ந்த விஜயசாந்தி (25) என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயது மற்றும் 2 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், பள்ளவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (25) என்பவருக்கும், மதன்குமார் மனைவி விஜயசாந்தி ஆகிய இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை மதன்குமார் கண்டித்து வந்துள்ளார். ஆனாலும் அவர்கள் தங்கள் உறவை தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் விஜயசாந்திக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த அக்டோபர் 8ஆம் தேதி பிரபாகரனுடன் விஜயசாந்தி வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மதன்குமார் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி, மனைவியை மீட்டுத் தரக்கோரி திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் புகாரின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை கூறப்படுகிறது. எனவே, வீட்டை விட்டு வெளியேறிய இருவரையும் தேடும் பணியில் மதன்குமாரும் அவரது உறவினர்களும் இறங்கியதாக கூறப்பபடுகிறது.

மதன்குமார் தனது மனைவியை ஈரோடு, பெங்களூரு, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவரது மனைவி கிடைக்கவில்லை. ஏற்கனவே போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல், காலதாமதம் செய்வதாக குற்றம்சாட்டிய மதன்குமார் உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோருடன், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அறிந்து வந்த திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மதன்குமாரை சந்தித்து உங்கள் மனைவியை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+