கணவன் இறந்த துக்கம் தாளாமல் சுருண்டு விழுந்து இறந்த மனைவி - கிருஷ்ணகிரியில்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இறந்த கணவரின் உடல் மீது விழுந்து கதறிய மனைவியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த நாகம்பட்டியைச் சேர்ந்த விவசாயி முருகன். இவரது மனைவி எல்லம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
முருகன், எல்லம்மாள் இருவர் மட்டும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் முருகன் காலமானார். எல்லம்மாள் கணவரின் உடல் அருகே அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தார். தகவல் தெரிந்து உறவினர்கள் மற்றும் மகன்கள் இறுதிச்சடங்கிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கணவரது உடல் மீது விழுந்து கதறியழுத எல்லம்மாள் நீண்ட நேரமாக எழுந்திருக்கவில்லை. உடலில் எந்த அசைவும் இல்லாததால், உறவினர்கள் அவரை எழுப்ப முயன்றனர். அப்போது எல்லம்மாளும் இறந்து தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இருவரது உடல்களையும் ஒன்றாக அடக்கம் செய்தனர். கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் இறந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications