சாணியை வைத்து இளங்கோவனுக்கு சிலை வடித்த ஹூசைனி!
சென்னை: 50 கிலோ மாட்டுச்சாணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு சிலை வடித்துள்ளார் கராத்தே வீரர் ஹூசைனி.
மோடி - ஜெயலலிதாவின் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமான உருவபொம்மைகள் எரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஜெயலலிதா விடுதலை பெறவேண்டி தன்னைத்தானே சிலுவையில் அறைந்துகொண்டு விபரீதமாக பெர்ஃபார்மன்ஸ்கள் மூலம் அம்மாவின் மனசில் இடம்பெற்று வரும் கராத்தே வீரர் ஹூஸைனி இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு விபரீத சிலை வடிப்பில் ஈடுபட்டார்.

சிலுவை வேண்டுதல்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்ற ஜெயலலிதா முதல்பதவியிழந்தார். இதனையடுத்து மீண்டும் முதல்வராக வர வேண்டி, தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொண்டு வேண்டுதலில் ஈடுபட்டார் ஹூசைனி.

7 நிமிடம் சிலுவையில்
சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது இல்லத்தில் எட்டு அடி உயரம், ஆறு அடி அகலம், 300 கிலோ எடை கொண்ட சிலுவையில் இரண்டு கைகள் மற்றும் கால்களிலும் ஆணி அடித்துக்கொண்டு சுமார் 7 நிமிடம் சிலுவையில் நின்ற படி ஜெயலலிதா விடுதலைக்காக பிரார்த்தனை செய்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது. இதுபோன்ற விபரீத செயல்களை செய்யக்கூடாது என்று ஜெயலலிதாவும் அறிவுரை வழங்கினார்.

சாணியில் சிலை
இந்த நிலையில் மாட்டுச்சாணிகளிலேயே அதிக நாத்தம்பிடிச்ச சாணி ஒரு 50 கிலோ வாங்கி அதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு சிலை வடித்தார்.

ரொம்ப நாறுதோ
ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளரான கராத்தே வீரர் ஹூசைனி அவரது வீடு அமைந்துள்ள கலாஷேத்ரா காலனியில் இன்று காலை முதல் சாணத்தாலான சிலையை செய்து 3 மணிக்கு முடித்தார் இந்த சிலையை நேரில் பார்க்கப் போகிறவர்கள் கர்ச்சிப்புடன் போவது நல்லது.

ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
அரசியல் தலைவரையோ, நடிகரையோ பிடிக்காவிட்டால் போஸ்டரிலோ, சிலையிலோ சாணியடிப்பார்கள். ஆனால் சாணியில் சிலை வடிக்க வேண்டும் என்று ரூம் போட்டு யோசித்திருப்பாரோ ஹூசைனி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications