எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே போய் சொல்வேன் - சபாநாயகர் வேதனை

எனக்கு நேர்ந்த கொடுமைகளை எங்கே போய் சொல்வேன் என்று சட்டசபையில் திமுக எம்எல்ஏக்களினால் தள்ளி, பிடித்து இழுக்கப்பட்ட சபாநாயகர் வேதனை தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்எல்ஏக்களும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் கடும் ரகளையில் ஈடுபட்டனர். திமுக எம்எல்ஏக்களினால் பாதிக்கப்பட்ட சபாநாயகர், அவையை ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடிய உடன் பேசிய சபாநாயகர், எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே போய் கூறுவேன் என்று கூறினார்.

I am doing my work TN assembly Speaker P Dhanapal

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்கட்சியினரின் ரகளையால் அவை போர்க்களமானது. சபாநாயகர் இருக்கையை திமுக எம்எல்ஏக்கள் முற்றுகையிட்டனர். அப்போது எம்எல்ஏக்கள் சிலர் சபாநாயகரின் மேஜையை தள்ளிவிட்டனர். மைக்கை உடைத்தனர். அப்போது ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க செல்வம், புரசைவாக்கம் சட்டசபைத் தொகுதி திமுக எம்எல்ஏ ரங்கநாதன் ஆகியோர் சபாநாயகரை தள்ளினர், அவர் பதறி நகரவே கைகளை பிடித்து இழுத்தனர். இதனையடுத்து சபாநாயகரை அவைக்காவலர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். சட்டசபை ஒருமணி ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடிய உடன் சபாநாயகர் பேசினார் அப்போது எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே போய் சொல்வது என்று வேதனையுடன் சபாநாயகர் கேள்வி எழுப்பினார். விதிகளின் படி அவையை நடத்த கடமைப்பட்டுள்ளேன் என்றும் சபாநாயகர் கூறினார். இது முறையா? உறுப்பினர்கள் செய்வது நியாயமா என்று கேட்டார்.

தேதியை மாற்றுங்கள் என்று முழக்கமிட்டு திமுகவினர் மீண்டும் ரகளையில் ஈடுபடவே அனைவரையும் வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால் வெளியேற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+