Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த அணியிலும் சேரவில்லை.. ரிசார்ட்டுக்கும் போகலை.. மயிலை எம்எல்ஏ நடராஜ்

ஒபிஎஸ் அணியிலும் சேரவில்லை, சசிகலா அணியிலும் சேரவில்லை என் தொகுதியில் கடமையாற்றி வருகிறேன் என்று மயிலாப்பூர் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ நடராஜ் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : எந்த அணியிலும் சேரவில்லை, ரிசார்ட்டுக்கும் போகவில்லை என்று சென்னை மயிலாப்பூர் அதிமுக எம்எல்ஏ நட்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். தனது தொகுதி அலுவலகத்தில் பணி செய்து வருவதாகவும் நடராஜ் தெரிவித்துள்ளார்.

யார் எந்தப்பக்கம் போவார்கள், முதல்வர் நாற்காலி யாருக்கு என்று கடந்த ஓருவாரகாலமாகவே தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு பக்கமும் ஆட்களை இழுக்கவும் ஆதரவு திரட்டவும் அதிரடி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

I am not alligned with anybody, says Myalpore ADMK MLA

சசிகலா அணியில் இருப்பவர்கள் சொகுசு பண்ணை வீடுகளிலும் ரிசார்ட்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஓ.பன்னீர் செல்வத்திற்கு 6 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மயிலாப்பூர் எம்எல்ஏ எங்கே என்று பலரும் தேட ஆரம்பித்தனர். முன்னாள் காவல்துறை தலைவரும் ஐபிஎஸ் அதிகாரியுமான நடராஜ் கூட சசிகலா கும்பலால் சிறை வைக்கப்பட்டுள்ளாரா என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர்.

இல்லை இல்லை நடராஜ் எப்பவுமே ஓ.பன்னீர் செல்வத்திற்குத்தான் ஆதரவு தருவார் என்றும் தெரிவித்தனர். ஆனால் நடராஜிடம் இருந்து எந்த கருத்தும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தான் எந்த அணியிலும் இல்லை என்றும் தொகுதியில் மக்களுக்கு தனது பணியை செய்து வருவதாகவும் கூறியுள்ளார் நடராஜ்.

வாக்கு வங்கி அரசியலில் தான் ஈடுபடவில்லை என்றும், காரணங்கள் நியாயங்கள் அடிப்படையில் எனது முடிவு அமையும் என்றும் நடராஜ் கூறியுள்ளார். போனில் சிலர் அவதூறாக பேசுவதால் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளேன் என்றும் நடராஜ் கூறியுள்ளார்.

நடராஜ் தெரிவித்துள்ள கருத்துக்கு பலரும் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளனர். விரைவில் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் பலரும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

Mylapore ADMK MLA and Former DGP Natraj has clarified that he is not alligned with any team of the ADMK.

60 words

மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் எப்பவுமே ஓ.பன்னீர் செல்வத்திற்குத்தான் ஆதரவு தருவார் என்றும் தெரிவித்தனர். ஆனால் நடராஜிடம் இருந்து எந்த கருத்தும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தான் எந்த அணியிலும் இல்லை என்றும் தொகுதியில் மக்களுக்கு தனது பணியை செய்து வருவதாகவும் கூறியுள்ளார் நடராஜ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+