கமல்ஹாசனெல்லாம் ஒரு ஆளே கிடையாது.. அசால்ட்டாக கூறிய அமைச்சர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசனெல்லாம் ஒரு ஆளே கிடையாது என அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். மேலும் அவரது புகாருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும் அமைச்சர் அன்பழன் தெரிவித்துள்ளார்.

விஜய்டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிழ்ச்சிக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. தமிழர் கலாச்சாரத்தை சீரழிக்கும் அந்நிகழ்ச்சியை தடை செய்யக்கோரியும் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசனை கைது செய்யக்கோரியும் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்க நடிகர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு மழுப்பலாக பதில் அளித்த அவர், காயத்ரி ரகுராமின் சேரி பிஹேவியர் பேச்சு சரிதான் என்பது போல் சப்பைக்கட்டு கட்டினார்.

அனைத்து துறைகளிலும் ஊழல்

அனைத்து துறைகளிலும் ஊழல்

அதேநேரத்தில் தமிழக அரசின் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளையும் கமல்ஹாசன் கூறினார். தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

அமைச்சரிடம் கேள்வி

அமைச்சரிடம் கேள்வி

இந்த நிலையில் சென்னையில் நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசினார. அப்போது கமல்ஹாசனின் ஊழல் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஒரு ஆளே கிடையாது

ஒரு ஆளே கிடையாது

இதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பழகன் நடிகர் கமல்ஹாசனின் புகாருக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது என்றார். கமல்ஹாசன் எல்லாம் ஒரு ஆளே கிடையாது என்றும் அவர் ஒருமையில் கூறினார்.

I was the first to say that the system is not right, said actor kamalhasan-Oneindia Tamil
கமலைக் கண்டித்து போராட்டங்கள்

கமலைக் கண்டித்து போராட்டங்கள்

நடிகர் கமல்ஹாசனைக் கண்டித்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அமைச்சர் அன்பழகன் கமல் குறித்து இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Anbazhagan insulting Actor Kamalhassan. He said i am not cosdering kamal as a person. He also said i can not answer for Kamal's questiones.
Please Wait while comments are loading...