தினகரனின் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு 'நோ' பதில்.... மு.க.ஸ்டாலின் ஒரே போடு!
ஆர்.கே நகர் தொகுதியின் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனின் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்க தயாராக இல்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: அதிமுக ஆட்சியை கவிழ்க்க தாம் பேரம் பேசி வருவதாக கூறும் டிடிவி தினகரனின் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு தம்மால் பதில் கூறமுடியாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆர்.கே.இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார் தினகரன். இந்நிலையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்த தினகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று, இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் மீட்பேன். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து அதன் மூலம் வெற்றி பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
மக்களிடம் எங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஆட்சியை கவிழ்க்க எங்கள் எம்.எல்.ஏக்களிடம் நண்பர்கள் மூலம் மு.க.ஸ்டாலின் பேரம் பேசி வருகிறார். எங்கள் எம்எல்ஏ-க்களிடமே மு.க.ஸ்டாலின் சென்று நீங்கள் 5 அல்லது 6 பேர் ஓபிஎஸ் அணியில் இணைந்து கொள்ளுங்கள் என்று அவர்களை கட்டாயப்படுத்தி வருகிறார் என்றார் தினகரன்.
தினகரனின் இந்த குற்றச்சாட்டு குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோது, இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகள் மூலம் அரசியல் விளம்பர தேட தினகரன் முயற்சிக்கிறார். இதுபோன்ற தரம் தாழ்ந்த அவரது விமர்சனங்களுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது என்றார் மு.க.ஸ்டாலின்.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications