துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்.. அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ் உருக்கம்!
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை கவனிக்க துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக பேசியுள்ளார்.
Recommended Video

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பணிகளை கவனிக்க துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக பேசியுள்ளார்.
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

செயற்குழுவில் ஆலோசனை
இந்த கூட்டத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. புதிதாக கட்சி பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்களின் செயல்பாடு குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. மாலை 4.45 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 8 மணிக்கு முடிந்தது.

இரங்கல் தீர்மானம்
கூட்டத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கேரளா மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நாடாளுமன்ற மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தயாராக இருக்க வேண்டும்
கட்சிப் பணிகள் குறித்து நான் அவரிடம் ஆலோசனை நடத்துகிறேன். ஆட்சி பற்றி அவர் என்னுடன் ஆலோசனை நடத்துகிறார். நமக்கு ஆட்சி முக்கியமில்லை. கட்சிதான் முக்கியம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அதற்கு நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும்.

ராஜினாமா செய்ய தயார்
மூத்த அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும். தொண்டர்கள் விரும்பினால் நானே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சிப் பணியை செய்ய தயாராக இருக்கிறேன் என உருக்கமாக பேசினார் ஓ.பன்னீர்செல்வம். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications