For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்ணாக இருப்பதால் எதிர்ப்பு அதிகமாம்.. சொல்கிறார் சசிகலா

பெண்ணாக இருப்பதால் அரசியலில் அதிமாக எதிர்ப்பு தனக்கு இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சொகுசு ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை காண 3வது நாளாக இன்று சசிகலா கூவத்தூர் சென்றார்.

தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காகவும், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக யாரும் சென்று விடக் கூடாது என்பதற்காகவும் சசிகலா 119 எம்எல்ஏக்களை கூவத்தூரில் உள்ள ஒரு சொகுசு ரிசார்ட்டில் 6 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு வெளியுலகத்தில் இருந்து எந்தவித தொடர்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக செல்போன், கேபிள் டிவி, செய்தித்தாள் தடை செய்யப்பட்டுள்ளது.

I am targeted by political enemies says Sasikala

இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாக இன்றும் சசிகலா கூவத்தூர் சென்று அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது, செய்தியாளர்களிடம் சசிகலா பேசியதாவது:

அரசியலில் பெண்ணாக இருந்தால் அதிகம் எதிர்ப்பு வரும். பத்திரிகையாளர் தாக்கப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. அதிமுகவினர் அப்படி செய்ய மாட்டார்கள். ஜெயலலிதாவை பொருத்தவரை ஒரு ராணுவ கட்டுப்பாட்டோடு கட்சியை நடத்தினார்கள். எங்கள் கட்சியினர் அப்படித்தான் கட்டுப்பாடோடு இன்றும் இருக்கின்றனர். அப்படி இருக்கும் போது அதிமுகவினர் யாரும் இப்படி செய்திருக்க மாட்டார்கள். எங்களுக்கு வேண்டாதவர்கள் இப்படி செய்திருக்கலாம்.

சட்டசபை கூட்டம் நடைபெறும் போது நிகழ்ந்த சில சம்பவங்கள்தான் ஓபிஎஸ் மேல் எனக்கு சந்தேகம் உருவானது என்றும் சசிகலா கூறினார்.

English summary
ADMK general secretary Sasikala reached Koovathur and told media that I am targeted by political enemies today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X