தூங்கி எழுவதற்குள் இப்படி வதந்தி பரப்புவதா? கொதிக்கும் சாருபாலா
திருச்சி: நான் இன்னமும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். அசந்து தூங்கிய நேரத்தில் கட்சி மாறிவிட்டதாக வதந்தி பரப்பி விட்டனர் என்று சாருபாலா தொண்டைமான் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் பிரிந்து வந்தபோது, அவரது தலைமையை ஏற்று முன்னாள் திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமானும் தமாகாவில் இணைந்தார். தற்போது திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக இவர் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், சட்டசபைத் தேர்தலில் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், திடீரென தேமுதிக- மக்கள் நலக்கூட்டணியில் ஜி.கே.வாசன் இணைந்தார்.
இதனால் தமாகாவில் கழகக்குரல் வெடித்தது. மூத்த தலைவர்களான பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், சாருபாலா தொண்டைமான் உள்ளிட்டோர் கட்சி தாவ இருப்பதாக தகவல் வெளியானது.
இதில் பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் கூட்டணி தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்து விட்டனர். இருவரும் தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியில் இணையப்போகின்றனர். ஆனால், எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் தான் அதிமுகவில் சேர இருப்பதாக வந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்று மறுத்தார்.
இந்த நிலையில், சாருபாலா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக நேற்று தகவல் பரவியது. இந்த தகவல் சாருபாலாவுக்கும் சென்றது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர், "என்னுடைய வளர்ச்சியை பிடிக்காத உள்ளூர்காரர்கள் யாரோ, இப்படி வதந்தியை கிளப்பியுள்ளனர். நான் தமாகாவில்தான் இருக்கிறேன். உடல் நிலை சரியில்லாததால் மாத்திரை சாப்பிட்டு அசந்து தூங்கி விட்டேன். என் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. அந்த நேரத்தில் இப்படி கிளப்பி விட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications