For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோதனைக்காக வந்தவர் போலி என எனக்கு தெரியாது.. மாதவன் பேட்டி!

வீட்டிற்கு வந்த நபர் போலி என தனக்கு தெரியாது என தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ.தீபா வீட்டுக்கு வந்த டுபாக்கூர் ஐடி அதிகாரி..வீடியோ

    சென்னை: வீட்டிற்கு வந்த நபர் போலி என தனக்கு தெரியாது என தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்துள்ளார்.

    சென்னை: தியாகராய நகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி வந்த நபர் திடீரென ஓட்டம் பிடித்தார்.

    போலீஸ் விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த அவர் சுவர் ஏறி குதித்து தப்பியோடினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வீட்டில் அனுமதித்தேன்

    வீட்டில் அனுமதித்தேன்

    இந்நிலையில் தீபாவின் கணவர் மாதவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வீட்டிற்கு வந்வர் ஐடி அதிகாரி என அடையாள அட்டையை காண்பித்தார் என்றும் அதனாலயே வீட்டில் அனுமதித்தேன் என்றும் கூறினார்.

    சந்தேகமே வரல

    சந்தேகமே வரல

    காலை 7 மணிக்கு வீட்டிற்கு வந்த அவர் தன்னிடம் நல்ல முறையில் பேசியதாகவும் அவர் கூறினார். அந்த நபர் மீது தனக்கு எந்த சந்தேகமும் வரவில்லை என்றும் மாதவன் தெரிவித்தார்.

    ஏன் ஓடினார்

    ஏன் ஓடினார்

    அந்த நபர் காண்பித்தது போலி அடையாள அட்டையா என்றும் தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். போலீசார் வந்தவுடன் அவர் ஏன் ஓட்டம்பிடித்தார் என்றும் தனக்கு தெரியாது என்றார் மாதவன்.

    செட்டப் செய்தீர்களா?

    செட்டப் செய்தீர்களா?

    தீபா வீட்டில் இல்லை என்றும் சிகிச்சைக்காக வெளியே சென்றுள்ளார் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே தாங்களே வீட்டின் மீது கல்எறிந்துவிட்டு போலீஸில் போலி புகார் அளித்தது போன்று இப்போதும் செட்டப் செய்துள்ளீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    தீபாவிடம் கேளுங்கள்

    தீபாவிடம் கேளுங்கள்

    அதற்கு பதிலளித்த மாதவன், தான் இதுவரை எந்த போலி புகாரும் அளித்ததில்லை என்றார். மேலும் இதுகுறித்து நீங்கள் தீபாவிடம் தான் கேட்க வேண்டும் என்றும் மாதவன் கூறினார்.

    English summary
    Deepa's husband Madhavan has said that I did not get any doubt on the person who came for IT raid. That person was showing me IT ID card He said further.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X