அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை நானும் பார்க்கவில்லை - திருமாவளவன்
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை தானும் பார்க்கவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை தானும் பார்க்கவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் நாள்தோறும் ஒவ்வொரு தகவலை தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதாவை ஒரு நாள் கூட மருத்துவமனையில் சந்திக்கவில்லை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.

ஆனால் அமைச்சர்கள் நிலோபர் கபில் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்தித்ததாக தெரிவித்தனர். அமைச்சர்களின் இந்த முரணான கருத்தால் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் வலுத்துள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதாவை மருத்துவமனையில் தானும் சந்திக்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் இதனை தெரிவித்தார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரையை மட்டுமே சந்தித்து பேசினோம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதாகவும் அவர் கூறினார்.
தமக்கு கட்டுப்படாதவர்கள் மீது வருமானவரித்துறையை மத்திய பாஜக அரசு ஏவிவிடுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே ஆளுநர், பாஜக தலைவர் அமித்ஷா, ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில் திருமாவளவனும் தான் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை என கூறியிருப்பது ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
-
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications