தம்பி விஜய்க்கு எதிரா நான் எப்போ பேசினேன்? அக்கா தமிழிசை அந்தர் பல்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தம்பி விஜய்க்கு எதிராக தான் பேசவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் குறித்து விமர்சித்ததாக பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அரசியல் ஆசையில் விஜய் ஏதேதோ பேசுவதாகவும் தமிழிசை நடிகர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்தார்.

I Did not oppose Thambi Vijay in the Mersal movie: Tamilisai

பாஜகவின் எதிர்ப்பால் மெர்சல் திரைப்படம் பெரும் பிரபலமானது. நல்ல வசூலையும் பெற்றது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் மெர்சல் படம் விவகாரத்தில் தம்பி விஜய்க்கு எதிராக தான் கருத்து கூறவில்லை என்றார். படத்தில் உள்ள தவறான கருத்துகளை மட்டுமே எதிர்த்தோம் என்றும் அவர் கூறினார்.

தமிழிசை திடீரென நடிகர் விஜய்யை தம்பி என்றும் குறிப்பிட்டும் அவருக்கு எதிராக பேசவில்லை என்று கூறியிருப்பதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu BJP leader Tamilisai sounder rajan calls Actor Vijay as Thambi. She told that she did not opposing Thambi Vijay in the Mersal movie.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற