தமிழகத்திற்கு வந்த சோதனையை பாருங்க... டிவி பேட்டியில் தாறுமாறு செய்த தீபா கணவர் மாதவன்!
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் குறித்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவனிடம் டிவி சேனல் ஒன்று கருத்து கேட்டபோது உளறிக் கொட்டினார் அவர்.
நீங்கள் போட்டியிட விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, எதிர்பாராமல் இவ்வளவு சீக்கிரமாக தேர்தலை நடத்த காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதில் பங்கேற்பது குறித்து எங்கள் கட்சியினருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்.
என்றைக்கு கடைசி தேதி என்பது தெரியவில்லை. அது தெரிந்த பிறகு (!!!!) அதற்கு முன்பாக, கட்சியினருடன் கலந்து பேசி முடிவெடுப்பேன். இதில் போட்டியிடுவதா இல்லையா என்பது பற்றி முடிவு செய்யவில்லை. போட்டியிட முடிவு செய்தால் நாங்கள் தனித்தே நிற்போம்.

தீபாவுக்கு எனது ஆதரவு ஏன்
உங்கள் மனைவி தீபா போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, சொன்னாரே பார்க்கலாம் ஒரு பதிலை. அதையும் பாருங்கள். "அது அவங்களைத்தான் கேட்கனும். அவங்களோட விருப்பம் அது. அவர் போட்டியிட்டால் என்னுடைய ஆதரவு தேவைப்படாது. அவர்கள் போட்டியிட்டால் அவர்கள் பேரவை சார்பிலேயே நிற்கலாம்" என்றார்.

கட்சி தொடங்கினார்
தீபாவிடம் தகராறு ஏற்பட்டதால், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையிலிருந்து விலகி, "எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திமுக" என்று கட்சியை தொடங்கினார் மாதவன். அந்த கட்சி சார்பில் தான் போட்டியிடுவது குறித்துதான் அவர் இப்போது கூறியுள்ளார்.

ஒரு வருஷமாச்சு பாஸ்
இதில் ஓராண்டு கழித்து ஆர்.கே.நகரில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதை சீக்கிரமாக ஏன் தேர்தல் நடத்தப்படுகிறது என புரியவில்லை என மாதவன் கூறினார். டிசம்பர் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், என்றைக்கு கடைசி தேதி என்று தெரியவில்லை என மாதவன் கூறியதும் நகைப்பை வரவழைப்பதாக உள்ளது.

கணவன்-மனைவி தகராறு
போயஸ் இல்லத்தில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியபோது அங்கு தீபா தனது டிரைவர் ராஜாவுடன் வந்திருந்தார். அப்போது மாதவன் உடன் வரவில்லை. கணவன்-மனைவி நடுவே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை மாதவன் பேட்டி ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications