அந்த 11 பேரும் ஏன் எடப்பாடியை சந்திச்சாங்க.. இந்தக் கேள்விக்கு ஓ.பி.எஸ் பதில் என்ன தெரியுமா?
தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எம்எல்ஏ-க்கள் ஏன் சந்தித்தனர் என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சென்னை: தோப்பு வெங்கடாச்சலம் அணியினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவர்களிடமே சென்று கேளுங்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. பிறகு சசிகலா ஆதரவு எம்எல்ஏ-க்கள் கூவத்தூரில் சிறைபிடித்து வைக்கப்பட்ட போது நகை, பணம், பதவி ஆகியவற்றை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வழங்குவதாக தினகரன் பேரம் பேசினாராம்.
ஆனால் அவை இது வரை இவர்களுக்கு கிடைக்கவில்லையாம். இதனால் தோப்பு கே.வெங்காடசலம் தலைமையில் 11 எம்எல்ஏ-க்கள் ரகசியக் கூட்டங்களில் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். மேலும் அமைச்சரவையில் மாற்றம் செய்து வாக்கு கொடுத்தபடி பதவி தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஆலோசனை செய்தனர்.

வெலவெலத்த எடப்பாடி
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் அரசின் பெரும்பான்மை பலத்தை இழக்க செய்ய எம்எல்ஏ-க்கள் முடிவு செய்துள்ளதாகவும், கோஷ்டி கோஷ்டியாக ரகசியக் கூட்டங்களை நடத்துவதாலும் வெல வெலத்து போனார் எடப்பாடி.

தலைவலி வருமோ
மேலும் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஏதேனும் தலைவலி ஏற்பட்டு விடக் கூடும் என்பதால் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது.

தலைமைச் செயலகத்தில் பேச்சு
அதன்படி தோப்பு கோஷ்டியை சேர்ந்த எம்எல்ஏ-க்களை நேற்று தலைமை செயலகத்துக்கு முதல்வர் அழைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இன்று 15 எம்எல்ஏக்கள் முதல்வர் பழனிச்சாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். இன்பதுரை, சந்திரசேகர், உமா மகேஸ்வரி, குணசேகர், பரமேஸ்வரி, சத்யா உள்ளிட்டோர் அமைச்சர் உதயகுமாருடன் சென்று முதல்வரை சந்தித்தனர்.

ஓ.பி.எஸ். கருத்து
ஆட்சியை நாங்கள் கவிழ்க்க மாட்டோம், தானாக கவிழும் என்று ஏற்கெனவே ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்த நிலையில் எம்எல்ஏ-க்களின் இந்த சந்திப்பு குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் அந்த எம்எல்ஏ-க்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார் ஓபிஎஸ்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications