மே 28-ல் புதிய படம் தொடங்குகிறது.. ரஜினி
ஒழுக்கத்தை இயக்குநர் எஸ்.பி. முத்துராமனிடம் இருந்து கற்றுக் கொண்டதாகவும் தமது புதிய படம் வரும் 28--ந் தேதி தொடங்குவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஒழுக்கத்தை இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் இருந்து கற்றுக் கொண்டாகவும், தமது புதிய படம் வரும் 28--ந் தேதி தொடங்குவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கரூர், குமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுடன் இன்று ரஜினி சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ஒழுக்கத்தை எஸ்.பி.முத்துராமனிடம் இருந்து கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில் படப்பிடிப்பு தளத்துக்கு தாமதமாக வந்து கொண்டிருந்தேன். அப்போது எஸ்.பி. முத்துராமன்தான் ஹீரோவே தாமதமாக வந்தால் சரியாக இருக்காது என்று அறிவுறுத்தினார்.
அதுமுதல் எல்லாரையும் விட நான்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு முதலில் வருவேன். மே 28-ஆம் தேதி அடுத்த படத்தை தொடங்குகிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications