எனக்கும் கருணாநிதிக்குமான உறவை கொச்சைப்படுத்தினர்: குஷ்பு வேதனை
கருணாநிதிக்கும் எனக்குமானது தந்தை மகள் உறவு என்று குஷ்பு கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: எனக்கும் கருணாநிதிக்கும் இருந்தது தந்தை, மகள் உறவு என்றும் ஆனால் அதை கொச்சைப்படுத்தப்பட்டு பேசப்பட்டதாக கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில், குஷ்பு உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
திமுகவில் அங்கம் வகித்த குஷ்பு, மு.க.ஸ்டாலின் குறித்து சில கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் குஷ்பு வீட்டை திமுக தொண்டர்கள் தாக்கி அந்த சம்பவம் பெரும் பரபரப்பானது.
|
ஸ்டாலினுக்கு வாழ்த்து
இந்த நிகழ்வுக்கு பிறகு குஷ்பு திமுவிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து, அங்கு அவருக்கு கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. குஷ்பூ காங்கிரசில் இருந்தாலும், திமுக மீது அவ்வப்போது கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வந்துள்ளார். கருணாநிதி மறைவின்போதும் அவரது இரங்கலை வருத்தத்தோடு தெரிவித்தார். திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, ‘'இளவரசர் அரசராகிவிட்டார்" என்று தனது வாழ்த்துக்களையும் ட்விட்டரில் பதிவிட்டார்.

புகழஞ்சலி கூட்டம்
இந்நிலையில் சென்னை சந்தோம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி அரங்கத்தில், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் புகழ் வணக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டார். அப்போது பேசிய குஷ்பு, தமிழ்நாட்டு மக்களுக்காக இறுதி வரை போராடிய கலைஞர் கருணாநிதியிடம் இருந்து, தாம் தமிழையும், அரசியலையும் கற்றுக்கொண்டடேன் என்றார்.

மரியாதை கற்க வேண்டும்
தமக்கு தமிழ்மொழி மீதான பற்று வருவதற்கு காரணமே கருணாநிதி என்றும், மரியாதை என்பதற்கான அர்த்தத்தையும் கருணாநிதியிடம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். தனக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உள்ளிட்ட கொள்கைகளை கற்றுக் கொடுத்ததும் கருணாநிதிதான் என்றார்.

தந்தை-மகள் உறவு
மேலும் தமக்கும் கருணாநிதிக்கும் ஆன உறவு தந்தை, மகள் போன்றது என குறிப்பிட்ட குஷ்பு, ஆனால் அது கொச்சைப்படுத்தப்பட்டதாகவும் உருக்கத்துடன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications