நான் என்ன எனக்கு, என் கட்சிக்கு ஓட்டு போடுங்கன்னா கேட்கிறேன்: விஜயகாந்த்
சென்னை: நான் சட்டசபைக்கு வரும்போது வருவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறி தேமுதிக சார்பில் வியாழக்கிழமை சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டார்.
அப்போது விஜயகாந்த் பேசுகையில்,

மதுக்கடைகள்
மதுக்கடைகளை மூடுவதில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகாவில் எல்லாம் மதுக்கடைகள் மூடப்படவில்லையே என்று அரசு தெரிவிக்கக் கூடாது. குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளதை தமிழக அரசு நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா
ஜெயலலிதா எதையுமே சாதிக்கவில்லை. சட்டமன்ற தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கும் விஷயத்தில் அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறது. மக்கள் நன்றாக இருந்தால் எனக்கு போதும்.

ரேஷன் கடைகள்
ரேஷன் கடைகளில் ஒழுங்காக பொருட்களை வினியோகம் செய்வது இல்லை. எப்பொழுது பார்த்தாலும் அரிசி இல்லை, மண்ணெண்ணெய் இல்லை என்று தான் கூறுகிறார்கள்.

சசிபெருமாள்
காந்தியவாதி சசிபெருமாளின் மரணத்தில் சந்தேகமாக இருக்கிறது. மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்திய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வல்லவர்கள், நல்லவர்கள்.

ஓட்டு
எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள், எனக்கு வாக்களியுங்கள் என்று நான் கேட்கவில்லை. நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்று தான் கூறி வருகிறேன். 2016ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் தேமுதிக வெற்றி பெறும். நான் சட்டசபைக்கு வரும்போது வருவேன் என்றார் விஜயகாந்த்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications