நான் சாகவில்லை... உயிரோடு காபி குடிச்சிட்டு இருக்கேன் - சுரேஷ் மேனன்
நான் சாகவில்லை அந்த செய்தி முற்றிலும் தவறு என்று நடிகை ரேவதியின் முன்னாள் கணவர் சுரேஷ் மேனன் கூறியுள்ளார்.
சென்னை : ரேவதியின் முன்னாள் கணவர் சுரேஷ் மேனன் இறந்து போனதாக சில மணிநேரங்களுக்கு முன்னர் பிளாஷ் நியூஸ் வெளியானது. ஆனால் அந்த தகவலில் உண்மையில்லை என்றும் தான் உயிரோடுதான் இருப்பதாகவும் சுரேஷ் மேனனே கூறியுள்ளார்.
மனைவி ரேவதியுடன் சுரேஷ் மேனன் நடித்து புதுமுகம் என்ற பெயரில் தமிழ் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இயக்குநராக இருந்த சுரேஷ்மேனன் மனைவியுடன் ஹீரோவாக நடித்த முதலும் கடைசியுமான படம் அது. இதனையடுத்து அரவிந்த் சாமியை ஹீரோவாக வைத்து பாசமலர்கள் என்ற படத்தை இயக்கினார்.

சுரேஷ்மேனன் ரேவதி
ஒளிப்பதிவாளராக இருந்த சுரேஷ் மேனன் இயக்குநராக மாறியதில் இருந்தே வணிக ரீதியாக இவர் இயக்கிய படங்கள் வெற்றி பெறவில்லை. ரேவதி சுரேஷ்மேனன் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து ஏற்பட்டது.

சுரேஷ்மேனன் மரண வதந்தி
இந்த நிலையில் இன்று காலையில் இயக்குநரும் நடிகை ரேவதியின் முன்னாள் கணவருமான சுரேஷ் மேனன் காலமாகிவிட்டதாக தொலைக்காட்சிகள், இணையதளங்களில் செய்தி வெளியானது. அது ஒளிபரப்பப்பட்ட சில நிமிடங்களிலேயே நிறுத்தப்பட்டது.

புதுமுகம் இயக்குநர்
மலையாளத்தில் புதுமுகம் என்ற படத்த இயக்கிய தீபன் என்பவர் மரணமடைந்தார். தமிழில் சுரேஷ் மேனன் அதே பெயரில் படம் இயக்கியுள்ளதால் ஏற்பட்ட குழப்பத்தில் சுரேஷ் மேனன் இறந்து போனதாக செய்திகள் ஒளிபரப்பாகின.

நான் சாகவில்லை
இந்த நிலையில் தான் உயிருடன் இருப்பதாக சுரேஷ் மேனன் கூறியுள்ளார். நான் செத்தெல்லாம் போய்விடவில்லை. உயிரோடுதான் இருக்கிறேன் நிம்மதியாக காபி குடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த செய்தி முற்றிலும் தவறு என்று தெரிவித்துள்ளார்.

சுரேஷ் மேனன் விளக்கம்
பல ஆண்டுகளுக்கு பிறகு 4ஜி மற்றும் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் சுரேஷ் மேனன் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் அவர் திடீரென உயிரிழந்து விட்டதாக வதந்தி பரவியுள்ளது. தான் சாகவில்லை என்று அவரே விளக்கம் அளித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications