பதவியை விட்டுக்கொடுப்பார் ஓபிஎஸ்- சசிகலாவிற்காக ராஜினாமா செய்வேன்: ஆர்.பி உதயகுமார்
சசிகலாவிற்காக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை விட்டுக்கொடுப்பார் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் நியமனம் செய்யப்பட்டார். அதிமுகவின் பொது செயலாளர் பதவி காலியாகவே, சசிகலாவை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் பொதுச்செயலாளராக பதவியேற்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கட்சி, ஆட்சியை சசிகலாவே வழி நடத்த வேண்டும் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். சசிகலாவை சந்தித்து தீர்மான நகலை அளித்து வருகின்றனர்.

ஆர்.கே. நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்று சசிகலா முதல்வராக வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளிப்படையாகவே பேட்டியளித்து வருகிறார். இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயகுமார், சசிகலாதான் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த வேண்டும் என்று கூறினார்.
சசிகலா முதல்வராகவேண்டும் என்பதற்காக தனது பதவியை ஓ.பன்னீர் செல்வம் விட்டு தருவார் என்றும் உதயகுமார் கூறினார். சசிகலா ஆர்.கே. நகரில் போட்டியிடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளதாக கூறப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உதயகுமார், சின்னம்மா விரும்பினால், பலரும் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயார். அவர் விரும்பினால் நான் என்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் உதயகுமார் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications