கோக், பெப்சி குடிப்பதை நிறுத்திவிட்டேன்.. ஏ.ஆர்.முருகதாஸ் !
கோக், பெப்சி குளிர்பானங்கள் பருகுவதைத் நிறுத்தி விட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: கோக், பெப்சி உள்ளிட்ட அன்னிய நாட்டு குளிர்பானங்கள் குடிப்பதை 3 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், கோக், பெப்சி பருகுவதைத் தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் ஆதரவு பெருகி வருகிறது.

இதனிடையே மார்ச் 1 ஆம் தேதி முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடலூரில் உள்ள வேல்முருகன் சினிமாஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் இளநீர், கரும்பு ஜூஸ் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்தநிலையில் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு பானங்கள் குடிப்பதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
I stopped drinking Pepsi or coke since 3 years while I started writing kaththi, Now it's also banned from our shooting spot 👍
— A.R.Murugadoss (@ARMurugadoss) January 26, 2017
இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: " மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கத்தி படத்திற்கான கதையை எழுதும் போதே, கோக், பெப்சி போன்ற அந்நிய நாட்டு பானங்களை குடிப்பதை நிறுத்திவிட்டேன். படப்பிடிப்பு தளங்களிலும் அந்நிய நாட்டு பானங்களை பயன்படுத்த தடை செய்துள்ளேன்."என தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications