போலீஸிடம் நிலானி கூறிய 'அந்த' பதிலே காந்தியை தற்கொலைக்கு தூண்டியது.. வெளியாகும் திடுக் தகவல்கள்!
போலீஸிடம் நிலானி கூறிய பதிலே அவரது காதலன் காந்தி லலித்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படுகிறது.
சென்னை: போலீஸிடம் நிலானி கூறிய பதிலே அவரது காதலன் காந்தி லலித்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படுகிறது.
சீரியல் நடிகை நிலானிக்கு காந்தி லலித்குமார் காலில் மெட்டி போட்டு திருமணம் செய்துள்ளார். செப்டம்பர் 4ஆம் தேதி இந்த திருமணம் நடந்துள்ளது என நிலானியும் காந்தி லலித்தும் சேர்ந்து கூறும் வீடியோ வெளியானது.
மேலும் நடிகை நிலானிக்கு காந்தி லலித்குமார் மெட்டி போட்டுவிடும் வீடியோவும் வெளியானது. அதோடு இல்லாமல் அந்த மெட்டியை காட்டுவது போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் நிலானி.

வெளியான ஆதாரங்கள்
மெட்டியை போட்டு திருமணம் செய்து கொண்டதாக கூறி இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்த வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

நிலானி புகார்
இந்நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி வற்புறுத்தியதாக நடிகை நிலானி உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் மீது போலீஸில் புகார் அளித்தார்.

தீக்குளிப்பு
இதையடுத்து இருதரப்பையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து கடந்த 16-ம் தேதி கே.கே.நகரில் காந்தி தீக்குளித்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.

நண்பராக தான் நினைத்தேன்
இதைத்தொடர்ந்தே இருவரின் அந்தரங்க புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. கணவன் மனைவி போல் வாழ்ந்த நிலையில் போலீஸிடம் காந்தியை தான் நண்பராக தான் நினைத்து பழகினேன் என அந்தர்பல்டி அடித்தாராம் நிலானி.

தவறாக புரிந்துகொண்டார்
தான் நட்பாக பழகியதை காந்தி தவறாக புரிந்து கொண்டதாகவும், அவர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு டார்ச்சர் செய்ததாகவும் போலீஸிடம் கூறியுள்ளார் நிலானி. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காந்தி தனது காதலை நிலானி கொச்சைப்படுத்தியதே தாங்கிக்கொள்ள முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நிலானி தலைமறைவு
உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் மரணமடைந்ததை தொடர்ந்து நிலானியை கே.கே.நகர் போலீசார் தேடி வருகின்றனர். காந்தியுடனான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து நிலானி தற்போது தலைமறைவாகிவிட்டார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications