சோனியா ஓகே சொன்னால் மீண்டும் விளவங்கோட்டில் போட்டியிடுவேன்... விஜயதாரணி
சென்னை: காங்கிரஸ் மேலிடம் வாய்ப்புக் கொடுத்தால் மீண்டும் விளவங்கோடு தொகுதியிலேயே போட்டியிடுவேன் என அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜயதாரணி தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி.
தற்போது அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் விஜயதரணி, முன்னதாக தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருந்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் ஏற்பட்ட மோதலால் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி பதவியை அவர் இழந்தார். அதனைத் தொடர்ந்து டெல்லி சென்று கட்சி மேலிடத்தை சந்தித்துப் பேசிய விஜயதரணிக்கு அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த, கட்சி மேலிடம் வாய்ப்பளித்தால் மீண்டும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உண்மை... நேர்மை...
என்னை பொறுத்தவரை உண்மைக்கும், நேர்மைக்கும் மதிப்பளித்து அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி எனக்கு இந்த பொறுப்பை வழங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சி உழைப்பாளிகளை ஒருபோதும் மறக்காது. அவர்களுக்கு நிச்சயம் பதவி வழங்கும்.

கோஷ்டிகள்...
கட்சியில் கோஷ்டிகள் இருப்பதாக சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னுடைய விளவங்கோடு தொகுதியில் எனது பணியை தொடர அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி கூறியுள்ளார்.

வெற்றி...
எனது பணிகள் மக்களை சென்றடைந்திருக்கிறது. மீண்டும் போட்டி காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டமான நிலை இருந்தபோது, விளவங்கோடு தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.

மக்களின் குரல்...
சட்டசபையிலும் காங்கிரஸ் கட்சியின் குரலாகவும், மக்களின் குரலாகவும் பேசி வந்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சி தலைமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

மீண்டும் விளவங்கோடு...
வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடுவேன்' என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications