யாருக்கு ஆதரவு என்பதை இன்று அறிவிப்பேன் - மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி
எனது ஆதரவு யாருக்கு என்பதை இன்று அறிவிப்பேன் என மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமும் அன்சாரி தமது ஆதரவு யாருக்கு என்பதை இன்று அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் தற்போது உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் யார் பக்கம் இருக்கப் போகிறார்கள் என்ற சூழ்நிலையில் சசிகலாவின் பக்கமே அனைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. இதனிடையே நேற்று 5 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து சசிகலாவுக்கு ஆதரவாக உள்ள மற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் அருகே ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர்.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 135 பேரில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டவர்கள் மூன்று பேர். கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் நடிகர் கருணாஸ் மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி. இவர்கள் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதால் அவர்களும் அ.தி.மு,க சட்டமன்ற உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள்.
இவர்களில் கருணாஸ், தனியரசு இருவரும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள். இந்நிலையில் தமிமுன் அன்சாரி ஆதரவு யாருக்கு என்பது தெரியாத சூழல் நிலவிய நிலையில், தனது ஆதரவு யாருக்கு என்பதை இன்று அறிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications