நான் என்றும் தமிழர்கள் பக்கமே நிற்பேன்.. ரஜினி முன்பு முழங்கிய சத்யராஜ்
நடிகர் சங்க போராட்ட மேடையில் பேசிய நடிகர் சத்யராஜ் தான் என்றுமே தமிழர்கள் பக்கம் தான் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை : காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்கோரி திரையுலகினர் நடத்திய அறவழிப்போராட்டத்தில் நடிகர் சத்யராஜ், குரல் கொடுக்க தைரியம் இருந்தால் தமிழர்கள் பின்னால் நில்லுங்கள் ; இல்லாவிட்டால் ஓடி ஒளிந்துகொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முண்ணனி நடிகர்கள் கலந்துகொண்டனர். காலை 9 மணியளவில் தொடங்கிய போராட்டம் மதியம் 1 மணியளவில் நிறைவு பெற்றது.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டைத் தர வேண்டும் என்கிற கோரிக்கை உட்பட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக மேடையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அருகில் இருந்த சத்யராஜ் பேசுகையில், நான் என்றுமே தமிழ் மக்களுக்கு ஆதரவாகத்தான் இருப்பேன். தமிழர்களை உணர்வுகளை மதியுங்கள், அப்படி மதிக்காத எந்த அரசுக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்; ராணுவமே வந்தாலும் பயப்படமாட்டோம். குரல் கொடுக்க தைரியம் இருந்தால் தமிழர்கள் பின்னால் நில்லுங்கள் ; இல்லாவிட்டால் ஓடி ஒளிந்துகொள்ளுங்கள் என்று ஆவேசமாகப் பேசினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications