தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெற்றால் மகிழ்ச்சி: கருணாநிதி அதிரடி பேட்டி
சென்னை: தி.மு.க கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க இடம்பெற்றால் மகிழ்ச்சி அடைவேன் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் பின்வருமாறு :-

விடுதலைச் சிறுத்தைகள்...
கேள்வி:- தி.மு. கழகத்தின் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டுமென்று உங்கள் தோழமைக் கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் உங்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறாரே?
பதில்:- அப்படி ஒன்றும் என்னிடம் கோரிக்கை வைக்கவில்லையே!

தேமுதிக வந்தால் மகிழ்ச்சி...
கேள்வி:- ஒரு கூட்டத்தில் பேசும்போது, திருமாவளவன், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வேண்டுமென்றும், உங்கள் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டுமென்றும் பேசியிருக்கிறார். தே.மு.தி.க., தி.மு. கழகக் கூட்டணியில் இடம் பெற வேண்டுமென்று பேசியிருப்பதால், அப்படி அமைய வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- அது அவருடைய நல்லெண்ணத்தின் அறிகுறி. அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

பேச்சுவார்த்தை தொடரும்....
கேள்வி:- நாகப்பட்டினத்தில் மீனவர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அதைப் பற்றிக் கவலைப்படாமல் மத்திய அரசு இலங்கை ராணுவத்திற்கு கூட்டுப் பயிற்சி நடத்துகிறது. மீனவர்களை வஞ்சிக்கின்ற காரியமாக இதைக் கருதலாமா?
பதில்:- தி.மு. கழகத்தின் சார்பில் நான் டி.ஆர். பாலுவை நாகப்பட்டினத்திற்கு அனுப்பினேன். அவர் அங்கே சென்று உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேசியிருக்கிறார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கருதுகிறேன். மத்திய அரசும் இது சம்பந்தமான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்.

அது அவர்கள் நாகரீகம்....
கேள்வி:- அ.தி.மு.க. பல்வேறு பொதுக் கூட்டங்களிலும், பொதுக் குழுவிலும், இன்று எம்.ஜி.ஆர். நினைவகத்தில் எடுத்துக் கொண்ட உறுதிமொழியிலும் உங்களைப் புறக்கணிக்க வேண்டுமென்றும், தீய சக்தி என்றும் கடுமையாக விமர்சிக்கிறார்களே?
பதில்:- அ.தி.மு.க. வினர் அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் என்னைக் கடுமையாகத் தாக்கி பஜனை பாடியிருக்கிறார்கள். அது அவர்களுடைய நாகரிகத்தையும், பண்பாட்டையும் எடுத்துக்காட்டுகின்றது' என இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications