அ.தி.மு.கவை எதிர்த்து பலமான கூட்டணி அமைப்பேன்: விஜயகாந்த்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில், கட்சி தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு ஏழைகளுக்கு பிரியாணி மற்றும் கேக் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
"தே.மு.தி.க.வில் மரங்கள் பட்டுபோய் விட்டதாக (எம்.எல்.ஏ.க்கள் சென்று விடடதாக) மற்றவர்கள் குறை சொல்கிறார்கள். பட்டுபோன மரங்கள் தான் மீண்டும் துளிர்க்கும். அது போல தான் தே.மு.தி.மு.க. மீண்டும் துளிர் விடப் போகிறது. கட்சியில் இருந்து போனவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை.
இங்கு பேசிய பேராயர் எஸ்ரா சற்குணம், நீங்கள் கேப்டனாக இருக்கிறீர்கள். உங்களுக்கு இன்னொரு கேப்டன் தேவைப்படுகிறது. ஒரு விமானத்தில் 2 கேப்டன்கள் இருப்பார்கள். ஒரு கேப்டனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டால் இன்னொரு கேப்டன் தான் காப்பாற்றுவார். எனவே இன்னொரு கேப்டன் சேர்த்து கொள்வது தவறு இல்லை என்றார். அதனால் நான் அவரது கருத்தை பரிசீலித்து முடிவெடுப்பேன்.
பாரதீய ஜனதா கூட்டணிக்கு செல்ல வேண்டாம் என எஸ்றா சற்குணம் கேட்டுக் கொண்டார். அதை நான் கண்டிப்பாக பரிசீலிப்பேன். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை எதிர்த்து பலமான கூட்டணி அமைப்பேன்".
தமிழ்நாட்டில் மின் வெட்டு இல்லை என முதல்வர் ஜெயலலிதா கூறி வருகிறார். ஆனால் தாம்பரம் தாண்டி விட்டால் 10 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. ஏற்காடு தேர்தலில் வெற்றி பெற்றதை பெருமையாக சொல்லுகிறார்கள். ஆனால் பெண்ணாகரம் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தது நினைவில்லையா?
கூடுதல் விலை கேட்டு கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு அதிகமாக வழங்க அரசு ஏன் முன்வரவில்லை. திருட்டுதனமாக ஆங்காங்கே மின்சாரம் திருடப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.
தமிழகத்தில் காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. தே.மு.தி.க. ஒன்றுதான் சாதி, மதமற்ற இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என 3 மத பண்டிகைகளையும் கொண்டாடுகிறோம் என்றும் விஜயகாந்த் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி
பாரதீய ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. , பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசியது அக்கட்சிகள் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெறலாம் என்பதை மேலும் உறுதிப்படுத்தும்விதமாக அமைந்தது.
தேமுதிக பரிசீலனை
ஆனால் தே.மு.தி.க. மட்டும் பிடிகொடுக்காமல் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தி.மு.க.வுக்கு நெருக்கமான எஸ்றா சற்குணம் கேட்டுக்கொண்டதை தாம் கண்டிப்பாக பரிசீலிப்பதாக விஜயகாந்த் கூறியிருப்பது, புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவை நெருங்கும் கேப்டன்
ஏற்கனவே விஜயகாந்தை தி.மு.க.. கூட்டணிக்குள் இழுக்க முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில், அவரது மேற்கூறிய பேச்சு, தி.மு.க.வுடன் அவர் நெருங்கி வருவதற்கான அறிகுறி அல்லது கூட்டணி தொடர்பாக தேசிய கட்சிகளுடன் அவர் நடத்தும் பேரத்தை இன்னும் வலுவாக்கி கொள்வதற்கான உத்தியாகவே பார்க்கப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications