ஜெ.,அத்தையின் பெயரைக் காப்பாற்ற அரசியலில் குதிக்க விரும்புகிறேன் - தீபா
சென்னை: எனது அத்தை தனது கட்சிக்காக கடுமையாக போராடியவர். பல போராட்டங்களை நடத்தியவர். அதைக் காப்பாற்ற நான் அரசியலில் ஈடுபட விரும்புகிறேன். அப்படி ஒரு முடிவு எடுக்க நேரிட்டால் எடுப்பேன் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
தீபா தந்தி டிவிக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் முதல்வர் ஜெயலலிதாவுடனான தனது உறவு மற்றும் சசிகலா குடும்பத்தாரால் தானும், தனது குடும்பத்தினரும் போயஸ்கார்டன் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து விரிவாகப் பேசினார்.

பேட்டியின் இறுதியில் இது நமது அத்தையின் கட்சி, எனவே அதன் தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா என்று பேட்டியாளர் ரங்கராஜ் பாண்டே கேட்டார். அதற்கு தீபா பதிலளிக்கையில், நான் அதிமுகவில் உறுப்பினர் இல்லை. ஆனாலும் அதில் ஈடுபாடு இருந்தது. அத்தை உயிருடன் இருந்தபோதே கூட நான் அதில் இணைய விரும்பினேன். ஆனால் அது முடியவில்லை.
அத்தை சிறையில் அடைக்கப்பட்டபோது கூட நான் அரசியலுக்குவர வேண்டும் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். அத்தை தனது கட்சிக்காக பல போராட்டங்களை சந்தித்தவர். போராடியவர். அதற்காக பாடுபட்டவர். அதைக் காக்க வேண்டும் என்ற நிலை வந்தால், அரசியலில் நான் ஈடுபடவேண்டும் என்ற நிலை வந்தால் அந்த முடிவை எடுப்பேன் என்று கூறினார் தீபா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications