எனக்குப் பின்னாடி தலைவர் ஆனவர்தான் இளங்கோவன்.. கோவை செல்வராஜ்
சென்னை: 2006ம் ஆண்டு முதல் தமிழக காங்கிரஸ் கட்சியின் சேவா தள தலைவராக பணியாற்றி வரும் என்னைக் கட்சியை விட்டு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அதிகாரம் கிடையாது என்று கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாநில தலைவராக என்னை 06.01.2006ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் நியமித்துள்ளார். அன்று முதல் தொடர்ந்து தலைவராக பணியாற்றி வருகிறேன்.

நான் சேவாதளத் தலைவரான பிறகு 2006ல் தலைவராக ஜி.கே.வாசன், அதன் பிறகு கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, பி.எஸ்.ஞானதேசிகன், இப்போது இளங்கோவன் உள்ளார்.

நான் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கோ, தலைவர்களுக்கோ விரோதமாக செயல்படவில்லை. நான் காங்கிரஸ் தலைமைக்கு கட்டுப்பட்டவன். காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணங்களை, குமுறல்களை மாநில சேவாதளத் தலைவர் என்ற முறையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும், தொண்டர்களின் கருத்தாக தெரிவித்தேன்.
கட்சித் தலைமை எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன். இது தொடர்பாக அகில இந்திய ஒழுங்கு நடவடிக்கை குழு என்னிடம் விளக்கம் கேட்டால் அவர்களுக்கு நான் விளக்கம் தருவேன் என்றார் செல்வராஜ்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications