அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றால் பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்போம்: ராமதாஸ்
தூத்துக்குடி: தமிழக சட்டசபைக்கான தேர்தலில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர்; பா.ம.க. தலைமையிலேயே கூட்டணி; தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டுடன் 10 மாதங்களுக்கு முன்னரே களம் இறங்கியது பா.ம.க.
ஆனால் 10 மாதங்களாக பிரதான எந்த அரசியல் கட்சியும் பா.ம.க.வுடன் கூட்டணிக்காக இணையவில்லை. ஆனால் பா.ஜ.க.வோ, தங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே பா.ம.க. நீடிக்கிறது என கூறிவந்தது.

இந்த குழப்பங்களுக்கு மத்தியில் அண்மையில் அன்புமணியை பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போதும் தானே முதல்வர் வேட்பாளர்; பாமக தலைமையிலேயே கூட்டணி என்பதில் அன்புமணி உறுதியாக இருந்து வந்தார்.
இதன் பின்னர் விஜயகாந்தையும் பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து பேசியிருந்தனர். அதேபோல் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களும் விஜயகாந்த்தை சந்தித்தனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கூட்டணிக்கு வர அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. தொடரும் எனக் கூறியிருக்கிறார்.
பா.ம.க. தலைமையிலான கூட்டணி என்ற முழக்கத்தின் சுருதி சற்று குறைந்திருக்கிறது!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications