திமுகவுடன் விஜயகாந்த் சேர்ந்திருந்தால் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றிருப்பார்... சொல்வது வைகோ
திருச்செங்கோடு: சட்டசபை தேர்தலில் திமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்திருந்தால் தேமுதிக 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றிருக்கும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ பேசியிருப்பது தேமுதிகவினரை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.
திருச்செங்கோட்டில் நடந்த மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
ஈழத்தை அழித்தவர்கள் என்ற பழியில் இருந்து தி.மு.க. தப்ப முடியாது. சட்டசபை தேர்தல் ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் நடந்த தேர்தல் அல்ல.

அதிமுக விமர்சிக்காது
பணநாயகத்திற்கும் மற்றொரு பண நாயகத்திற்கும் நடந்த தேர்தல். இதில் ஜனநாயகம் தோற்று விட்டது. தேர்தல் கூட்டணியில் இல்லாத போது அபாண்டங்களை சுமத்துவது தி.மு.க.வின் வேலை. ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த போதும் அ.தி.மு.க. அந்த காரியத்தை செய்யாது.
இவ்வாறு வைகோ பேசினார்.

விஜயகாந்த் காரணம்...
இதே கூட்டத்தில் பேசிய மதிமுக நிர்வாகி மனோகர், மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் தலைவர். அவர் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்தது தான் ம.தி.மு.க.வின் தோல்விக்கு காரணமாகிவிட்டது என்றார்.

கூட்டணி தர்மத்துக்கு எதிரானது...
உடனே கடுப்பாகிப் போன வைகோ மைக்கை பிடித்து, இப்படி பேசுவது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது. தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்ந்தால் கோடிக்கணக்கில் பணம், சீட்டு கொடுப்பதாக கூறப்பட்டது.

20 சீட் ஜெயிச்சிருப்பார்...
ஆனால் விஜயகாந்த் நம்மை மதித்து குறைந்த வாக்கு வங்கி கொண்ட மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்தார். தி.மு.க. கூட்டணிக்கு அவர் சென்றிருந்தால் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தே.மு.தி.க. வெற்றி பெற்றிருக்கும். தி.மு.க.வும் ஆளும் கட்சியாக வந்திருக்க கூடும்.
ஆனாலும் விஜயகாந்த் மக்கள்நலக் கூட்டணிக்கு வந்தார். அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். விஜயகாந்தால் நாம் தோற்கவில்லை. இதனால் இதுமாதிரி பேசக்கூடாது என கடிந்து கொண்டார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தால் 20 தொகுதிகளில் தேமுதிக வெல்லும் எனத் தெரிந்திருந்தும் விஜயகாந்தை இழுத்து கட்சியை இப்படி அழித்துவிட்டாரே என ஆதங்கப்படுகின்றனர் தேமுதிக தொண்டர்கள்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications