சசிகலா உள்ளிட்ட தீய சக்திகளை வெளியேற்றிவிட்டால் நாங்கள் 'அண்ணேன்டா தம்பிடா...' சொல்வது முனுசாமி
அதிமுகவுக்கு தீமையை விளைவிக்கும் சக்தியான சசிகலாவை வெளியேற்றிவிட்டால் நாங்கள் அனைவரும் அண்ணன், தம்பிகள்தான் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
சென்னை: அதிமுகவுக்கு தீமையை விளைவிக்கும் சக்தியான சசிகலாவை வெளியேற்றிவிட்டால் நாங்கள் அனைவரும் அண்ணன், தம்பிகள்தான் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக இணைப்பு குறித்து இரு அணிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டில் கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தைக்கு முன்னரே கட்சி அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் படங்களும், பேனர்களும் அகற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே பேச்சுவார்த்தைக்கான இணக்கமான சூழல் வரும்போது பேசுவோம். இன்று பேச்சுவார்த்தை , நாளை பேச்சுவார்த்தை என்று நாங்கள் சொல்லவில்லை. நிருபர்களாகிய நீங்கள் செய்திகளை வெளியிடுகிறீர்கள்.
சசிகலா, டிடிவி தினகரன் போன்ற தீய சக்திகளை வெளியேற்றிவிட்டால் நாங்கள் அண்ணன், தம்பிகள்தான். இது குடும்பச் சண்டைதான். கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்துள்ளோம். சசிகலாவும், தினகரனும் கட்சியை கைப்பற்ற துடித்து வருகின்றனர்.
இதுபோன்ற சூழல் எம்ஜிஆர் மறைந்தபோது கூட வந்ததில்லை. இரு அணிகளாக பிரிந்தோம். மீண்டும் சேர்ந்து கொண்டோம். அவ்வளவே என்றார் கே.பி.முனுசாமி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications