எடப்பாடி வென்றதாக அறிவித்தாலும் இறுதி முடிவு ஆளுநரிடம்தான்- மீண்டும் வாக்கெடுப்புக்கு உத்தரவிடலாம்!
எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக அறிவித்தாலும் இறுதி முடிவு ஆளுநரிடம்தான் உள்ளது. அவருக்கு திருப்தி இல்லையெனில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிடலாம்.
சென்னை: சட்டசபையில் பெரும் அமளி மற்றும் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இருந்தபோதும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு முறை மீது திருப்தி ஏற்படாவிட்டால் மீண்டும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட முடியும்.
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் இதை சபாநாயகர் தனபால் ஏற்கவில்லை. இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.
ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டு குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். அப்போது ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக கிழிந்த சட்டையுடனேயே ஆளுநர் வித்யாசகர் ராவை ஸ்டாலின் நேரில் சந்தித்து முறையிட்டார். இதன் பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

ஆளுநரிடம் புகார்
தற்போதைய நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். அதேநேரத்தில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு முறையாக நடத்தவில்லை என்ற புகாரும் ஆளுநர் முன் வைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரிடம் விசாரணை
இதனால் சட்டசபை நடவடிக்கைகள் தொடர்பான வீடியோ பதிவுகளை ஆளுநர் கேட்டு பார்வையிடலாம். அதேபோல் சபாநாயகர் தனபாலை நேரில் அழைத்து சட்டசபை சம்பவங்கள் தொடர்பாக ஆளுநர் விளக்கம் கேட்கவும் முடியும்.

மீண்டும் வாக்கெடுப்பு
இதில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முறையாக நடைபெறவில்லை என ஆளுநர் கருதினால் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்படும். அத்துடன் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை கண்காணிக்க 2 பார்வையாளர்களையும் சட்டசபைக்கு ஆளுநர் அனுப்பி வைக்கலாம்.

ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே
அந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாகத்தான் இருக்கும். வாக்குச் சீட்டுகளில் எம்.எல்.ஏக்கள் ஆதரவு விவரம் தெரிவிக்கப்பட்டு அது நேரடியாக ஆளுநர் அனுப்பி வைத்த பார்வையாளர்கள் வசம் ஒப்படைக்கப்படும். அந்த முடிவுகள் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

முன்னுதாரணம் இருக்கே..
கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருந்த போது இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு முதல்நாள் இரவு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் திடீரென சஸ்பென்ட் செய்யப்பட்டு மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் எடியூரப்பா வென்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு போனது.
அப்போது ஆளுநராக இருந்த எச்.ஆர். பரத்வாஜ், மற்றொரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டார். அந்த நம்பிக்கை வாக்கெடுப்பான ஆளுநர் அனுப்பிய பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இருப்பினும் எடியூரப்பா அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications